அக்ஷயா சேகர் பரதநாட்டிய அரங்கேற்றம் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இன்பச் சுற்றுலா வருணிகா ராஜாவின் 'Timeless Journey' அம்பிகா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம் சிந்தூரா ரவிச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம் ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமத்தின் நாட்டிய நாடகம் ப்ளூமிங்டன் தமிழ்ச் சங்கம் கோடை விழா மிச்சிகன் தமிழ்ச் சங்கம் இன்பச் சுற்றுலா இலக்கியா, ஹம்சா பரதநாட்டிய அரங்கேற்றம் லிவர்மோர் திருக்கோவிலில் குரு-சிஷ்யர் தினம் BATM முத்தமிழ் விழா 'நாட்யாரங்கம்' நிகழ்ச்சியில் செல்வி விநித்ரா மணி 'விஷன் எய்டு' அமைப்புக்காக கிருஷ்ணா நாட்டிய நாடகம் கான்கார்டு ஹிந்து ஆலயத்தில் உமையாள் முத்து சொற்பொழிவு வாஷிங்டன் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா GATS வருடாந்திரச் சுற்றுலா சௌந்தர்ய நாட்யாலயா நான்காம் ஆண்டு நிறைவு விழா
|
|
ஸ்ரீக்ருபா நடனக் கம்பெனியின் வருடாந்திரக் கலைவிழா |
|
- |செப்டம்பர் 2009| |
|
|
|
|
ஆகஸ்ட் 23, 2009 அன்று ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனியின் வருடந்திரக் கலைவிழா சரடோகா மகாஃபீ அரங்கில் நடைபெற்றது. திரு. அசோக் சுப்ரமணியத்தின் கர்நாடக இசையோடு நிகழ்ச்சி தொடங்கியது. சாவேரி ராகக் கீர்த்தனை, மைசூர் வாசுதேவாசாரின் ‘வந்தே நிஷமம்' (ஹம்சத்வனி), சுபபந்துவராளியில் ‘சத்யா நாராயண', மைசூர் மகாராஜாவின் ‘துர்கா தேவி' என எல்லாமே செவிக்கு அமுதம். பக்கவாத்தியம் வாசித்த வாசுதேவன் (மிருதங்கம்), வீரமணி (வயலின்) ஆகியோர் உறுதுணையாக அமைந்தனர்.
குரு விஷால் ரமணி அவர்கள் அவ்வையாரின் ‘பாலும் தெளிதேனும்' பக்திப் பனுவலோடு நடன நிகழ்ச்சியை ஆரம்பித்தார். அசோக் சுப்ரமணியத்தின் அம்ரிதவர்ஷினி ராகப் புஷ்பாஞ்சலி மற்றும் குரு கல்யாணசுந்தரம் பிள்ளையின் காம்போஜி வர்ணம், பூர்விகல்யாணியில் பாபநாசம் சிவனின் ‘க்ஷீரசாகர சாயீ' எல்லாவற்றிலும் ஸ்ரீக்ருபாவின் முத்திரை. |
|
சங்ககாலக் கவிஞர் உலோச்சனார் பாடலுக்கு விஷால் ரமணியின் அபிநயம் கைதட்டலைப் பெற்றது. நடனநிகழ்ச்சிக்கு முரளி பார்த்தசாரதி பாட, வாசுதேவன் நட்டுவாங்கம் கூற, தனம்ஜயனின் மிருதங்கமும் வீரமணியின் வயலினும் களைகூட்டின.
இந்த வருடாந்திர நிதிதிரட்டும் விழாவுக்கு ஆதரவு நல்கியோருக்கும் பிறருக்கும் குரு விஷால் ரமணி நன்றி கூற நிகழ்ச்சி நிறைவெய்தியது.
ராஜா ரங்கநாதன், கூபர்டினோ, கலி. |
|
|
More