Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் புதிர்
- வாஞ்சிநாதன்|செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlarge'எழிலாய் பழமை பேச' என்ற வலைப்பதிவில் காளமேகப்புலவரால் உந்தப்பட்டு ஒரு தமிழ் ஆர்வலர் விளையாடியிருக்கிறார். கவி காளமேகத்தின் தாக்கம் என்று அவர் இட்ட பத்து பதிவுகளைப் புதிர் போன்ற வார்த்தை விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் படித்து இன்புறலாம். மெல்லின எழுத்துகள் மட்டும் கொண்டு, இடையின எழுத்துகள் மட்டும் கொண்டு, வல்லினம் மட்டும் கொண்டு என்று மூவகையிலும் பாடல்கள் எழுதியுள்ளார். அவருடைய மாலை மாற்று (palindromic verse),

வாவா பாடுபா மாயாநீ,
நீயாமா பாடுபா வாவா!
என்பது சுவாரசியமானது. அதைத் தவிர ஆநீர்நடை என்றும் முயன்றுள்ளார். அவற்றை முழுமையாகத் தெரிந்து கொண்டு ரசிக்க maniyinpakkam.blogspot.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.

குறுக்காக
3. உடை மடிப்பு கலையாத தகாத சங்கமம் மயக்கத்தில் மதம் ஒழிக்கும் (5)
6. இவருடைய குறிக்கோளை அடைய போதுமென்ற மனம் போதுமோ? (4)
7. வழி நடுவில் துளி மண் கோல் (4)
8. ஒரு பிரபந்தம் எழுத முக்கால் பக்கம் முன் பாத்திரம் வை (6)
13. கவுரி விசயம் தலையின்றிக் கலைந்ததால் வசதி (6)
14. நோக்காமல் ராமன்பால் இடைவிட்டு மயக்கம் (4)
15. நெஞ்சம் நிறைந்து மரம் தானம் மெய்களின்றிச் சிதைந்தது (4)
16. தலை வார பாதி மரவுடை தைக்கச் சரிவு (5)

நெடுக்காக
1. ஒரு வரிக்குள் அடங்கிய இரண்டாம் வைரத்தால் மண்ணுக்குள் மறைந்த பாதை (5)
2. மாலையில் தொடுக்கப்பட்ட பூவா? கிராமத்தில் மலர்வது (5)
4. மூன்றில் ஒரு பகுதி நூறில் அடங்க சூளுரை (4)
5. வெளிப்படுத்த இறுதியாக தேகம் எரிச்சல் தரும் (4)
9. விழிப்புணர்வுள்ளவர்களுக்குக் காணக் கிடைக்காதது (3)
10. நெய்வேலி வாழ் மக்களின் அக்கறை? (5)
11. ஒரு தானியம் நனைந்தது என்றாலும் தோரணையில் மிடுக்கு (5)
12. ரகுவம்சத்தில் தோன்றியவனின் வேறு அவதாரம் (4)
13. தீவிரமாகத் தேட உதவும் ஆயிரங் கண்ணன்? (4)

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

vanchinathan@gmail.com
ஆகஸ்டு 2009 விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline