கார சோமாசி கடலைப்பருப்பு சோமாசி ஸ்பினாச் பனீர் சோமாசி
|
|
|
|
தென்னிந்தியாவின் சோமாசிதான் வட இந்தியாவின் சமோசாவா என்ற ஆராய்ச்சியில் இறங்காமல், இவற்றைச் செய்து தின்றால் ம்ம்ம்ம்... சுவையாக இருக்கும்.
இனிப்பு சோமாசி
தேவையான பொருட்கள் ரவை - 1 1/2 கிண்ணம் கசகசா - 3 மேசைக்கரண்டி சர்க்கரை - 1 கிண்ணம் தேங்காய்த்துருவல் - 1/4 கிண்ணம் பொட்டுக்கடலை - 3 மேசைக்கரண்டி பாதாம் பருப்பு - 8 முந்திரிப் பருப்பு - 8 நெய் - 2 தேக்கரண்டி ஏலக்காய் - 5 எண்ணெய் - பொரிக்க
செய்முறை ரவையோடு சிட்டிகை உப்பும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து 1 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். வெறும் வாணலியில் கசகசா, பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல், பாதாம், முந்திரி எல்லாம் சிவக்க வறுத்து எடுத்து, சர்க்கரை ஏலக்காய் சேர்த்து, மிக்சியில் பொடியாக அரைத்துப் பூரணம் செய்து வைக்கவும். பாக்கி முந்திரியைச் சிறிது நெய்யில் வறுத்து அதனுடன் போடவும்.
ஊற வைத்த ரவையை நன்றாக அழுத்திப் பிசைந்து நெய் அல்லது எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு அப்பளமாகக் குழவியால் வட்டமாக இடவும். நடுவில் பூரணத்தை 1 1/2 அல்லது 2 தேக்கரண்டி வைத்து அரை வட்டமாக மடிக்கவும். ஓரத்தைச் சிறிது தண்ணீர் தொட்டு மூடவும். சோமாசிக் கரண்டியைக் கொண்டு மூடுவது நல்லது. பூரணம் வெளியில் வராதபடி மூடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் சிறிது நெய் ஊற்றிக் காய்ந்ததும், மூடி வைத்துள்ள சோமாசி 2 அல்லது 3 எண்ணெய்க்கு ஏற்றவாறு போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இதை கோதுமை அல்லது மைதாவிலும் செய்யலாம். ஆனால் அவ்வளவு மொறுமொறுப்பாக இருக்காது. |
|
தங்கம் ராமசாமி, நியூஜெர்ஸி |
|
|
More
கார சோமாசி கடலைப்பருப்பு சோமாசி ஸ்பினாச் பனீர் சோமாசி
|
|
|
|
|
|
|