சோமாசி வகைகள் கடலைப்பருப்பு சோமாசி ஸ்பினாச் பனீர் சோமாசி
|
|
|
|
தேவையான பொருட்கள் உருளைக் கிழங்கு (வேகவைத்துப் பிசைந்தது) - 1 கிண்ணம் பட்டாணி - சிறிதளவு வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம் பீன்ஸ் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் காரட் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 6 கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு மஞ்சள் தூள் - சிறிதளவு கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி முந்திரி (வறுத்தது) - சிறிதளவு கரம் மசாலா - 2 தேக்கரண்டி எலுமிச்சம் பழம் - 1/2 மூடி உப்பு - தேவைக்கேற்ப கோதுமை (அ) மைதா மாவு - 1-1/2 கிண்ணம் எண்ணெய் - பொரிக்க |
|
செய்முறை கோதுமை மாவைச் சிறிது உப்புச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பாதி வதங்கும்போது காரட், பீன்ஸ், பட்டாணி, மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டுச் சுருள வதக்கவும். கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, எலுமிச்சைச் சாறையும் சேர்த்துப் பூரணம் செய்து கொள்ளவும்.
கோதுமை மாவைச் சிறு அப்பளமாகத் தேய்த்து நடுவில் பூரணம் வைத்து அரை வட்டமாக மடித்து ஓரம் பிரியாமல் துளி தண்ணீர் விட்டு அழுத்தி மூடிவிடவும். எண்ணெய் காய்ந்தவுடன் போட்டு, கரண்டியால் எண்ணெயை சோமாசி மேல் ஊற்றி உப்பலாகப் பொரிக்கவும். பொன்னிறம் வந்ததும் எடுத்து வைத்துச் சாப்பிடலாம். தேவையானால் சிறிது பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். எலுமிச்சம் பழம் பிழியாமலும் செய்யலாம்.
தங்கம் ராமசாமி, நியூஜெர்ஸி |
|
|
More
சோமாசி வகைகள் கடலைப்பருப்பு சோமாசி ஸ்பினாச் பனீர் சோமாசி
|
|
|
|
|
|
|