Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | கதிரவனை கேளுங்கள் | பொது | சிறுகதை | சின்னக்கதை
Tamil Unicode / English Search
Comments
Gomes Ganapathi (TN, United States)

Comments Home
Comments by Gomes Ganapathi (8)
Article: நம் அடையாளம்
Category: கவிதைப்பந்தல் (Oct 2012) Posted On: Oct 25, 2012
அன்புமிகு 'பழமை பேசி', உங்களின் 'நம் அடையாளம்' ஒரு அழகுமிகு படைப்பு. அமெரிக்க அனுபவம் ஒன்றினை புதுக்கவிதையில் சொல்வாரில்லையே என்றதொரு குறை எனக்கு நெடு நாளாய் உண்டு. ஒரு 'பஞ்ச் லைனில்' முடிவுற்ற உங்கள் கவிதைக்குள் உறைந்திருக்கும் அந்தச் சிறு கதை 'குறையொன்றும் இல்லை' எனக் கூறிட வைத்திட்டது. நன்றி. ஆஸ்த்ரேலியாவிலிருந்து அன்புடன் கோம்ஸ்

Article: மனுஷ்யபுத்திரன்
Category: நேர்காணல் (Sep 2012) Posted On: Sep 08, 2012
டாக்டர் வா.செ. குழந்தைசாமியின் 'வாழும் வள்ளுவத்தை'ப் படித்த போது 'என்ன ஒரு விரிந்த விஞ்ஞானப் பார்வை' என வியந்து நிற்பேன்! வள்ளுவனின் வார்த்தைகளுக்குள் ஆழமாய்த் தன்னைப் புதைத்துக் கொண்டிருக்கும் உட்கருத்தை ஊடுருவிப் பார்த்து 'வள்ளுவன் என்ன எண்ணிச் சொல்லி இருக்கலாம்' என நோண்டி எடுத்து நீங்கள் இயல்பாக வார்த்திடும் அழகு இருக்கிறதே..... ஹரி.... எங்கயோ போயிட்டீங்க சார்... என் பெரு மதிப்பிற்குரிய தமிழருவி திருமதி உமையாள் முத்து அவர்கள் சொல்வார்கள் "தென்றலைத் தொட்டதும் நான் முதலில் படிப்பது ஹரி மொழிதான்'.... நியாயம்தானே...  இந்த இதழில் திரு மனுஷ்ய புத்திரன் தன் நேர் காணலில் சொல்லியிருப்பது போலே.... 'இலக்கியம் எப்போதுமே தமிழில் வியாபாரமாக இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. வியாபார நோக்கில் மட்டுமே இருந்திருந்தால் இன்றைக்குத் தமிழில் பல நல்ல நூல்கள் வெளிவந்தே இருக்காது. இது ஒரு போராட்டம். வெகுஜன கலாசாரத்துக்கு எதிராக எழுத்தாளர்களும், கலைஞர்களும் தொடர்ந்து நடத்தும் போராட்டம். இதில் பலர் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையே இழந்திருக்கிறார்கள். அவர்களால்தான் இன்றைக்குத் தமிழ் வாழ்கிறது. இன்றைக்கு வாழ்கிற தமிழ் என்று நாம் எதைச் சொல்கிறோம் என்றால் எது நமது வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறதோ, எது நமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கிறதோ, அதைத்தான். அந்த நவீனத் தமிழை உருவாக்கியவர்களுக்குத்தான் மொழிசார்ந்த அத்தனை உரிமைகளும் இருக்கின்றன என்பதை நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்....' அந்த உரிமைக்குரிய ஒரு சிலரில் நீங்களும் ஒருவர் எனப் பெருமைப் படலாம். நன்றி உங்களுக்கு ஒரு புறம் என்றால்...புலம் பெயர்ந்த என் போன்றோருக்கு உங்களை இனம் காட்டி ஊருணியாய் உவந்தளிக்கும் தென்றலுக்கும் நன்றியென்பேன்.  Gomes from Australia

Article: புத்தகங்கள்
Category: கவிதைப்பந்தல் (Feb 2011) Posted On: Aug 31, 2012
அடடா, என்ன ஒரு அழகான கவிதை! எப்படி இதை இத்தனை நாள் படிக்காது போனேன். நன்றியுடன் ஆஸ்த்ரேலியாவிலிருந்து கோம்ஸ் கணபதி

Article: அடுத்தவர் பலவீனத்தை அணுகத் தெரிய வேண்டும்
Category: அன்புள்ள சிநேகிதியே (Aug 2012) Posted On: Aug 18, 2012
அன்பு மிகு சித்ரா, "....நிறைய முறை யோசித்து விட்டுத்தான் இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன். உங்களுடைய கருத்து என் விஷயத்தில் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசை...."    கடிதம் எழுதிய சகோதரியின் கவலை எனக்கு நியாயமாகப் பட்டது. இந்த இக்கட்டான நிலையை நீங்கள் எப்படித்தான் பார்க்கப் போகிறீர்கள் என்றதொரு விசாரம் எனக்கு. அடடா.... என்ன ஒரு தீர்க்கமான, தெளிவான, திக்குமுக்காடாத பதில். குறிப்பாக உங்கள் அனுபவம் ஒன்றைச் சொல்லி 'இப்படியும் பார்க்கலாமே' என்று கடிதம் எழுதிய சகோதரியை மட்டுமல்ல இதுபோலும் எத்தனையோ நண்பர்களை நெறிப்படுத்திடும் உங்களுக்கு கோடி வணக்கங்கள். ஆஸ்த்ரேலியாவிலிருந்து அன்புடன் கோம்ஸ் கணபதி

Article: பேராசிரியர் நினைவுகள்: வாமனம் எடுத்த விஸ்வம்
Category: ஹரிமொழி (Jul 2012) Posted On: Jul 28, 2012
"....ஆனால், இவர் இருக்கிறார் பாருங்கள் இவர், இந்த தாடிக்காரர், இவரிடம் வரும்போது மட்டும் ஆலயத்துக்குள் பிரவேசிக்கிற உணர்வோடு பயபக்தியாக வந்து சேரவேண்டும்.... " என்ன ஒரு தீர்க்கமான கருத்து! உங்களைப் போலவே இளம் வயதில் திக்குறளைக் கடனே என்று தேர்வுகளுக்காகப் படித்ததை நினைத்துக்கொண்டால் என் மேல் எனக்கே கோபம் வருவதுண்டு. என்றாலும் இன்று டாக்டர் வா.செ. குழந்தைசாமி பேராசிரியர் மற்றும் உங்களைப் போன்றோரின் எழுத்துக்களைப் படிக்கின்றபோது இன்றேனும் வள்ளுவனின் ஆலயத்துட் சென்று தரிசிக்க அல்ல, தவமிருக்க ஓர் வாய்ப்புக் கிட்டியமைக்கு நன்றி கூறாது போவேனோ?

Article: பனைமரம்
Category: இளந்தென்றல் (Jan 2012) Posted On: Feb 26, 2012
Beautiful; I see the tone of Kavimani Desigavinayagam Pillai's style in the lyrics. Please write more so that our younger generation could learn about simple yet valuable trees like Panaimaram

Article: வாழைக் கன்னு
Category: சிறுகதை (Dec 2010) Posted On: Dec 21, 2010
யாரையா இந்த அபர்ணா பாஸ்கர்! இத்தனை நாளா எங்கிருந்தீர்கள்? என்ன சரளமான, யதார்த்தமான நடை! ஒரு பாக்கியம் ராமசுவாமியோ, கிரேசி மோகனோ வரிந்து கட்டிக் கொண்டு எழுதியது போலிருக்கிறது! ஒரு 'வாழைக்கன்னுவை' வைப்பதில் இத்தனைச் சிரிப்பைக் கொண்டு வரமுடியுமென்று நான் எதிர் பார்க்கவே இல்லை. கொஞ்ச நேரம் TVயில் Seinfeld show பார்த்துக்கொண்டிருந்தது போல் ஒரு திகைப்பு இங்கு நம்மவர்கள் தமிழில் படித்துச் சிரிப்பதற்கு கொஞ்சம் பஞ்சம்; நிறைய எழுதுங்கள்.

Article: மீண்டும் ஒருமுறை...
Category: கவிதைப்பந்தல் (Mar 2010) Posted On: Mar 01, 2010
அழகாய் ஒரு கவிதை; நிறைய எழுதுங்கள். அன்புடன் கோம்ஸ்

© Copyright 2020 Tamilonline