Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
நம் அடையாளம்
- பழமைபேசி|அக்டோபர் 2012||(3 Comments)
Share:
பச்சைப்பட்டு விரித்தாற்போல்
யாருமில்லாப் புல்வெளி
கண்களைக் கொள்ளை கொள்ள
நடுவே கயல் துள்ளும் வெளியாக
ஊரோரக் குளம்!

அன்றாடம் குளக்கரையில் ஓட்டப்பயிற்சி
மாலை ஆறுமணிக்கு – அங்கே
ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையொருத்தி
இடவலமாய்ப் போய்க்கொண்டிருக்க
வலத்திலிருந்து இடமாய்ப் போவாள்
காகேசன் மங்கையவள்!
மூன்றாவதாய்ச் செல்லும் எனது
ஓட்டத்தின் பாதையினூடாய்
எதிராய்க் கடக்கையில் மட்டும்
அவள் சிந்தும் குறுஞ்சிரிப்பு ஒன்றே
அவளுக்கும் நமக்குமான உறவு!

கோடை வெம்மையால்
தடைபட்ட ஓட்டத்தை
மீட்டெடுக்க இன்றைக்கு
ஊரோரக் குளக்கரைக்குச் சென்றேன்.
காகேசக் குறுஞ்சிரிப்பைக் காணாமல்
ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையைக் கேட்க,
அவள் காட்டிய அவளோ
வாய்ப்புற்றின் வதைப்பில்
படுக்கையில் இருந்தாள்!
விரிந்த கண்கள் பேச
வாஞ்சையாய் அவளது இடக்கை
நம் வலக்கையைப் பற்றிக் கொண்டது!
ஓரிரு கணங்கள்
மெளனத்தினூடே கடக்க
விடைபெறும் தருணத்தில்
தட்டுத்தடுமாறி எழுந்து
புத்தகமொன்றைக் கொடுத்து
முடிந்தும் முடியாமல் உதிர்த்தாள்
குறுஞ்சிரிப்பொன்று – அது அவளுடைய
கடைசியானதாகவும் இருக்கலாம்!
வீடு வந்ததும்தான் பார்த்தேன்
புத்தகத்தின் தலைப்பு
Gandhi: His Life and Message for the World

பதிவர் பழமைபேசி
Share: 




© Copyright 2020 Tamilonline