|
|
1. ஒரு தந்தையின் தற்போதைய வயது அவரது மகனின் வயதைப் போல மூன்று மடங்கு. ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவரது வயது மகனின் வயதைப்போல நான்கு மடங்காக இருந்தது. அப்படி யானால் மகனின் வயது என்ன, தந்தையின் வயது என்ன? 2. வரிசையாக நின்று கொண்டிருந்த மாணவர்களில் முதலிலிருந்து எண்ணினால் ராமு ஒன்பதாவது நபர்; கடைசியில் இருந்து எண்ணினால் 38-வது நபர். அந்த வரிசையில் நின்று கொண்டிருந்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை யாது? 3. 3, 6, 18, 72 -- அடுத்து என்ன எண் வரும்? அதற்கான விதிமுறை எண்ண? 4. ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த 60 மாணவர்களும் உடன் வந்திருந்த மற்ற அனைத்து சக மாணவர் களுடன் கை குலுக்கினர். எத்தனை கை குலுக்கல்கள் அங்கு நிகழ்ந்திருக்கும்? 5. இரண்டு எண்களின் கூட்டுத் தொகை 36. ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்தால் வரும் தொகை 6. ஒன்றோடு ஒன்றைப் பெருக்கினால் வரும் தொகை 315 என்றால் அந்த எண் என்னவாக இருக்கும்? 6. 12345678 x 9 + 9 =?
அரவிந்த் |
|
விடைகள்
1. மகனின் வயது x என்றால் தந்தையின் வயது 3x ஆகும். ஐந்து வருடங்களுக்கு முன்னால் மகனின் வயது x-5. தந்தையின் வயது 3 (x-5). இரண்டையும் சமன் செய்தால், மகனின் தற்போதைய வயது 15. தந்தையின் வயது 45 (3 x 15 = 45). ஐந்து வருடங்களுக்கு முன்னால் மகனின் வயது 15-5 = 10. தந்தையின் வயது 40 (4 x 10 = 40).
2. n1 + n2 - 1 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். அதன்படி 9+38-1 = 46. ஆகவே வரிசையில் நின்று கொண்டிருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 46.
3. அடுத்து வரும் எண் 360 ஆகும். இந்த வரிசை அமைப்பு எண்களின் ஏறு வரிசையில் பெருக்குத் தொடராக அமைந்துள்ளது. 3 x 1 = 3, 3 x 2 = 6, 6 x 3 =18, 18 x 4 = 72. என்ற வரிசையில் அடுத்து வரவேண்டியது 72 x 5 = 360. ஆகவே அடுத்த இடத்தில் வரவேண்டிய எண் 360.
4. இதற்கு n x n-1 / 2 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை 60ஐ n என்று வைத்துக் கொண்டால் 60 * (59) / 2 = 1770. ஆக மொத்தம் 1770 கைகுலுக்கல்கள் அங்கே நிகழ்ந்திருக்கும்.
5. அந்த எண்கள் 21, 15 21 + 15 = 36 21 - 15 = 6 21 x 15 = 315
6. 12345678 என்ற எண்ணை 9 ஆல் பெருக்கி வரும் விடையுடன் 9ஐக் கூட்டக் கிடைப்பது 111,111,111. |
|
|
|
|
|
|
|