Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்துப் புதிர்: ஆகஸ்டு 2007
- வாஞ்சிநாதன்|ஆகஸ்டு 2007|
Share:
Click Here Enlargeதமிழுக்கு நல்ல காலம்தானா?

ஜூலை 2007 புதிரில் "மயக்கத்தில் இடை விட்டுக் கலக்க, நாரும் ஊரும் ஒன்று (5)" என்ற குறிப்பைத் தொடர்ந்து சில எண்ணங்கள்: நகர் என்றால் ஊர் (வினைச் சொல்) நகர் என்றாலும் ஊர்தான்! (பெயர்ச்சொல்). வினைச்சொல், அசைந்து இடம் மாறும் செயலைக் குறிக்கும். எனவே நகர்வது என்பது ஊர்வது (அது சரி, சென்னையில் நகரச் சொல்வதேயில்லை. ஓத்து, இல்லை தள்ளுதான்). கருநாகம் ஊரும் ஒரு ஜந்து.

நல்ல பாம்பு என்று சொல்வதே இந்த கருநாகத்தைத்தான். அது பாம்பின் நற்குணச் சான்றிதழ் அல்ல. ஒரு காலத்தில் தமிழில் நல்ல என்றால் கரிய நிறமான என்று பொருள். நல்ல மிளகு என்பது black pepper அதன் தரத்தைக் குறித்ததல்ல.

நல்லெண்ணெய் என்பதும் நிறத்தைக் குறித்தே. ஆனால் இந்த பொருளில் இப்போது தெலுங்கில் தான் 'நல்ல' புழங்கி வருகிறது. இது தமிழுக்கு நல்ல காலம்தானா?

vanchinathan@gmail.com

குறுக்காக

1. சிவந்த மாலை மஞ்சள் நிறத்திலிருக்கும்! (5)
4. கட்டு கட்டாமலிருந்தால் வருமானம் மிச்சம்தான் (2)
6. முறுக்கிய இழை எது? புதிராக இருக்கும் (4)
7. ஒரு வெளிநாட்டிற்கு அன்ன ஜந்து சிரச்சேதம் (4)
9. சலிப்பைத் தராத எதிர் வேகம் விசிறும் தட்டா? (5)
12. வயல்காரா! அண்ணி கடைசியாகக் கையில் இடுவது (4)
14. மண்ணரசி பூவின் முனை கிள்ளி எதிர்ப்புறமாய் நேர்நேர் செருகினாள் (4)
17. திருப்பணி தொடங்கியதும் நிறைவை அடை (2)
18. கூவித்திட்டுபவர் ஆரம்பித்து வைத்திருப்பது (5)

நெடுக்காக

1. ஓர் உலோகமே பாத்திரம் (3)
2. நேரான கணவனைப் பற்றிய காப்பியம்? (5)
3. பாதித் திருநாளை ஆழ்ந்து அனுபவி (2)
4. ஆற்றல் படைத்த காவல் லக்ஷ்மணனுக்கு அடங்கியது (3)
5. முத்தமிடும் இடத்திற்கு முதல் கண்ணின் தடயம் (4)
7. தழும்பில்லா வண்டு நுழைய மரியாதையில்லாமல் வெளியேறு ஒரு தின்பண்டத்திற்கு (3)
8. மலர்ந்ததும் மல்லிகையில் மூக்கைத் துளைத்து வருவது (4)
10. மறைந்து வெடிக்கும் விழியாள் (3)
11. இடையில்லாமல் பாண்டியன் முன்னே ஆடிய மாதர் பாடுவது சம்பூர்ணமானது (5)
13. பெண் உடுத்துவது குரங்கு வேலை செய்யும் நகை (3)
15. ஒரு துண்டைப் பிய்த்துக் கடை வீட்டு முன்னே ஆகாயம் (3)
16. வேகவைக்கும், இல்லாவிட்டால் உடலை வேகவைக்கவேண்டியதுதான் (2)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com
புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது இங்கு பார்க்கவும்.

ஜூலை 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

புதிர் விடைகள் அடுத்த மாத (செப்டம்பர் 2007) இதழில் வெளிவரும்.
Share: 




© Copyright 2020 Tamilonline