அரவிந்த்
விடைகள்
1. 10 குரங்குகள் 10 வாழைப்பழத்தைத் தின்ன 10 நிமிடங்கள். அதாவது ஒவ்வொரு குரங்கும் ஒரு வாழைப் பழத்தைத் தின்ன10 நிமிடம் எடுத்துக் கொள்கின்றது.
i) 5 குரங்குகள் 5 வாழைப்பழத்தைத் தின்னவும் 10 நிமிடங்கள் தான் ஆகும்.
ii) ஒரு குரங்கு ஒரு வாழைப்பழத்தைத் தின்ன 10 நிமிடங்களாகிறது. எனவே 60 நிமிடத்தில் 6 வாழைப்பழங்களை ஒரு குரங்கு தின்னும். 6 பழங்களுக்கு ஒரு குரங்கு என்றால் 60 பழங்களுக்கு 10 குரங்குகள் தேவைப்படும். எனவே 60 பழங்களை 60 நிமிடத்தில் 10 குரங்குகள் தின்னும்.
2. மொத்தம் 42 டாலர் அதில் வீட்டில் வைத்த பாதி 21 டாலர். மீதமிருக்கும் 21 டாலரில், தோட்டக்காரனுக்கு அளித்த 1 டாலர் போக மிஞ்சுவது 20 டாலர். அதில் பாதி ஹோட்டலில் செலவழித்தது 10 டாலர். டிப்ஸ் 2 டாலர் போக மீதம் இருப்பது 8 டாலர். அதில் புத்தகம் வாங்கிய பாதி 4 டாலர். மீதம் இருப்பது 4 டாலர். அதில் கோயில் உண்டியலில் செலுத்தியது 3 டாலர். ஆகக் கடைசியில் கையிருப்பு 1 டாலர். எனவே சங்கர் கையில் ஆரம்பத்தில் வைத்திருந்த தொகை 42 டாலர்.
3. மொத்தம் சர்மாவையும் சேர்த்து இரண்டு பேர் தான். எப்படியென்றால் ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு சகோதரன் தான் உண்டே தவிர, ஒவ்வொரு சகோதரிக்கும், ஒவ்வொரு சகோதரன் இல்லை. அதாவது a,b,cயை சகோதரிகள் என வைத்துக் கொண்டு x ஐச் சகோதரன் என வைத்துக் கொண்டால் x என்பவர் a,b,c என தனித்தனியாக ஒவ்வொருவருக்குமே சகோதரன் ஆகிறார். எனவே அக் குடும்பத்தில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை சர்மாவையும் அந்தச் சகோதரனையும் சேர்த்து இரண்டு பேர் மட்டுமே ஆகும்.
4. அத்தை மகள். D என்பவர் B,C,E ஆகிய மூவருக்குமே தாயாகிறார். B,C இருவரும் பெண்கள், சகோதரிகள். அவர்களின் சகோதரன் E. எனவே Bயின் மகள் Aவிற்கு E என்பவர் மாமா ஆகிறார். ஆக Bயின் மகள் Aயின் மகன் Xக்கு அத்தை மகளாகிறார்.
5. நான்கு மணிக்கு மூன்று விநாடிகள் ஆகுமென்றால், பதினோரு மணி அடிக்க பத்து விநாடிகள் ஆகும்.