FeTNA வழங்கும் தமிழ் விழா 2007 சிகாகோ தியாகராஜ உத்ஸவம் - 2007 'இட்ஸ் டிஃப்' வழங்கும் சங்கமம் OSAAT வழங்கும் கங்கா-காவேரி மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா வருகை டொரண்டோ பல்கலைக்கழகம் நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு
|
|
அர்ப்பணா டான்ஸ் குழுமம் வழங்கும் 'கிளாசிக் அர்ப்பணா 25' |
|
- T.E.S.ராகவன்|மே 2007| |
|
|
|
2007 மே 26 சனிக்கிழமை அன்று மாலை 7:00 மணிக்கு அர்ப்பணா நடனக் குழுமம் 'கிளாசிக் அர்ப்பணா 25' என்ற நாட்டிய நிகழ்ச்சியை இர்வைன் பார்க்ளே அரங்கத்தில் வழங்கும். டான்ஸ் ரிசோர்ஸ் மையத்தால் 'லாஸ் ஏஞ்சலஸின் மைல் ஸ்டோன் டான்ஸ் கம்பெனி 2007' எனத் தெரிவு செய்யப்பட்டுள்ள அர்ப்பணா தனது சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
விருதுகள் வென்றுள்ள, அர்ப்பணாவின் கலை இயக்குனரும் நடன அமைப்பாள ருமான ரம்யா ஹரிசங்கர் இந்நிகழ்ச்சியை வடி வமைத்து வழங்குகிறார். பாரம்பரிய பரத நாட்டியமும் அதன் புதிய, கற்பனை விரிவுகளும் சேர்த்தமைந்த இந்த நிகழ்ச்சியில் தனி மற்றும் குழு நடனங்கள் இடம்பெறும். ரம்யாவின் வழிகாட்டலில் அர்ப்பணா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவின் பல இடங்களில் நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளது. ஆர்ட்ஸ் ஆரஞ்ச் கௌண்ட்டி ரம்யாவை '2002ன் மிகச்சிறந்த கலைஞர்' எனத் தேர்ந்தெடுத்து கௌரவித்தது. தென்கலி·போர்னியாவில் நடைபெறும் பல விழாக்களில் அர்ப்பணா நடனக் குழுமம் வழமையாகப் பங்குகொள்கிறது. இந்த அமைப்பு இதுவரை சுமார் $80,000 வரை திரட்டி அறப்பணிகளுக்கு நிதியாக வழங்கியுள்ளது. |
|
நிகழ்ச்சி: கிளாசிக் அர்ப்பணா 25 நாள், நேரம்: 26 மே 2007; மாலை 7:00 மணி. இடம்: Irvine Barclay Theatre, Irvine நுழைவுச் சீட்டு: $35, $25, $15 தொலைபேசி மூலம் வாங்க: Box Office: 949.854.4646; Ticketmaster: 714.740.7878 இணையம் வழி வாங்க: www.thebarclay.org/www.ticketmaster.com மேலும் தகவலுக்கு மின்னஞ்சல் செய்க: info@arpanadancecompany.org
குழுமத்தின் செய்திக் குறிப்பிலிருந்து |
|
|
More
FeTNA வழங்கும் தமிழ் விழா 2007 சிகாகோ தியாகராஜ உத்ஸவம் - 2007 'இட்ஸ் டிஃப்' வழங்கும் சங்கமம் OSAAT வழங்கும் கங்கா-காவேரி மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா வருகை டொரண்டோ பல்கலைக்கழகம் நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு
|
|
|
|
|
|
|