Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் சித்திரை கொண்டாட்டம்
கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா
சின்சினாட்டியில் ‘பருவங்களின் நாதங்கள்’
ஸ்ருதி ஸ்வர லயா வழங்கும் இசைவிழா மற்றும் பயிலரங்கம்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
FETNA வழங்கும் தமிழ் விழா 2007
புற்றுநோய் நிதிக்காக க்ரியாவின் ‘Seeds and Flowers’
- மனுபாரதி|ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlargeநாளைக்கு இந்த மென்பொருளின் வெளியீடு இருக்கிறது. கடைசி நேரத்தில் புதிய பிரச்சினை. தீர்க்காமல் கிளம்பவே முடியாது,’ சிலிக்கன் வேலியில் இந்த வசனத்தை, எத்தனை புலம்பெயர்ந்த இந்தியக் கணவன்மார்கள் மனைவியரிடம் தொலைபேசியில் சொல்லியிருப்பார்கள்! மனைவிமார்கள், ‘பெங்களூரிலிருக்கும் பன்னாட்டு நிறுவனம் தோழியின் கணவருக்கு லட்சம் லட்சமாய் சம்பளம் கொடுக்கிறது. இந்தியாவிற்குத் திரும்பிப் போனால் என்ன?’ என்ற கேள்வியை எத்தனை முறை விடையாகக் கொடுத்திருப்பார்கள். அதி நவீனத் தொழில்நுட்பத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மிகப் பரிச்சயமான அன்றாட வசனங்கள் இவை. இவர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் இரண்டு: வேலை-குடும்பம் இரண்டையும் சமன் செய்வது எப்படி? அக்கரை (இந்தியா) இக்கரையை (அமெரிக்காவை) விடப் பசுமையாக இருப்பது போல் தெரிவதால் திரும்பிப் போகலாமா? புற்று நோய் அமைப்பு அறக்கட்டளை (CIF எனப்படும் Cancer Institute Foundation) க்ரியா நாடகக் குழுவினரைக் கொண்டு ஏப்ரல் 28 அன்று வழங்க இருக்கும் ‘Seeds and Flowers’ ஆங்கில நாடகம் இந்தக் கேள்விகளுக்கு விடைகாண முனைகிறது.

க்ரியா குழுவினர் சுருதி பேதம், மாயா, கடவுளின் கண்கள் போன்ற பல வித்தியாச மான நாடகங்களை வெற்றிகரமாக அளித்து வந்திருக்கின்றனர். இவற்றின் கதைக்களன் இந்திய மண்ணில் வாழ்பவர்களைப்பற்றி இருந்தன. முதன்முறையாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் வாழ்முறைக்கு மிக நெருக்கமான ஒரு கதைக்கருவை ‘விதைகள், பூக்கள்’ அரங்கேறப்போகிறது. க்ரியாவின் முந்தைய நாடகங்கள் தமிழில் இருக்க, இப்புதிய நாடகத்தின் கதைக்களன் அமெரிக்கத் தமிழர்களுடன் நிற்காமல் அமெரிக்க இந்தியர்கள் அனைவரையும் உள்ளடக்கியிருப்பதால், க்ரியா இதை ஆங்கிலத்தில் வழங்குவதே பொருத்தமாகிறது. சி.ஐ.·ப். அற நிறுவனம் க்ரியாவுடன், இந்தியாவின் அடையாறு புற்றுநாய் அமைப்புக்கான நிதி திரட்டும் நோக்கில், இந்தப் படைப்பை மேடையேற்றுகிறது.

சென்னை அடையாறில் பல வருடங்களாகப் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் அடையாறு புற்றுநோய் இன்ஸ்டிடியூட் (Adayar Cancer Institute) மிகவும் பிரசித்தி பெற்றது. அன்னை முத்துலட்சுமி தொடங்கிவைத்த இந்த அமைப்பு, வித்தியாசம் பாராமல் இலவசமாகவே இந்தியா முழுவதிலிருந்தும் வரும் பல ஏழைகளுக்குப் புற்றுநோய் சிகிச்சையை அளிக்கிறது. இந்நாடகத்தை வழங்கும் சி.ஐ.எ·ப்., அடையாறு புற்றுநோய் மையத்தின் ஒரு அமெரிக்க கிளைத் தொண்டு நிறுவனம். அதைப் பற்றி www.cifwia.orgஎன்ற வலைதளத்த்¢ல் வேண்டிய தகவல்களைப் பெறலாம்.

நாடகத்தில் முக்கியப் பெண்வேடமொன்றில் தோன்றும், லாஸ்யா பரத நாட்டியப் பள்ளியின் நடனகுரு திருமதி வித்யா சுப்ரமணியம், ‘இதன் பாத்திரங்களில் நம் ஒவ்வொருவரின் பிரதிபலிப்பு நிச்சயம் இருக்கிறது. தன் உண்மையான அடையாளம் குறித்த தேடலும், தன் கணவனோடான உறவில் தன்னுடைய அடையாளம் குறித்த தேடலும் நிறைந்த ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். அந்தப் பெண்ணாக நான் மாறுகையில் அவளுடைய குணாதிசயங்களுக்குள் நுழைந்து அவளைப் புரிந்தகொள்ள முடிவது நிறைவைத் தருகிறது. அவளது தேடல் நிறைவை அடைகிறதா என்பதை நாடகமே சொல்லும்’ என்று தன் அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறார்.
இந்த நாடகத்தின் கதை மற்றும் வசனகர்த்தா T.A. ராமானுஜம். வித்தியாசமான முடிவுடன் அமைந்த ‘கடவுளின் கண்கள்’-ஐ எழுதியவர் இவர். க்ரியாவின் பிற படைப்புகளை இயக்கிய நாடக இயக்குனர் தீபா ராமானுஜம் அவர்களே இதையும் இயக்குவதோடு, முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடிக்கிறார்.

கலை என்பது வாழ்வைப் பிரதிபலிப்ப தாகவும் அதே நேரத்தில் வாழ்வைச் செழுமைப் படுத்தி நம் சிந்தனைக்கு வித்திடுவதாகவும் இருக்கவேண்டும். க்ரியாவின் அப்படிப்பட்ட ஒரு கலைப்படைப்பு ‘Seeds and Flowers’ என்பதைப் நாடகத்தைப் பார்த்தால் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

நாடகம்: ‘Seeds and Flowers’
அரங்கேறும் நாள்: சனிக்கிழமை, ஏப்ரல் 28, 2007
காட்சி நேரங்கள்: 3 P.M. மற்றும் 7 P.M.
இடம்: Jackson Theater, Ohlone College, Fremont

நுழைவுச் சீட்டுகளுக்கு: www.sulekha.com/bayarea
குழு: “க்ரியா”
வழங்குபவர்கள்: Cancer Institute Foundation
வலைதளங்கள்: www.kreacreations.com, www.seedsandflowers.net, www.cifwia.org

மனுபாரதி
More

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் சித்திரை கொண்டாட்டம்
கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா
சின்சினாட்டியில் ‘பருவங்களின் நாதங்கள்’
ஸ்ருதி ஸ்வர லயா வழங்கும் இசைவிழா மற்றும் பயிலரங்கம்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
FETNA வழங்கும் தமிழ் விழா 2007
Share: 




© Copyright 2020 Tamilonline