Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
TNF ஆஸ்டின்: வெள்ள நிவாரண நிகழ்ச்சி
நேஷ்வில்: பொங்கல் விழா
டெலவர்: பொங்கல் விழா
NETS: பொங்கல் விழா
GATS: பொங்கல் விழா
டாலஸ்: பொங்கல் விழா
TMM: பொங்கல் விழா
சிகாகோ தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
பாரதி கலை மன்றம்: பொங்கல் விழா
பாரதி தமிழ்க்கல்வி: பொங்கல் விழா
GOD: ராமனுஜம்ஜி சத்சங்கங்கள்
CMAY: நிதி திரட்டக் கலைநிகழ்ச்சி
- சுதா லக்ஷ்மிநாராயணன்|மார்ச் 2016|
Share:
பிப்ரவரி 6, 2016 அன்று மில்பிடாஸில் உள்ள 'ஷிர்டி சாயி பரிவாரில்' CMAY (Classical Music Awareness Among Youth) நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. 'The Rich Indian Classical Art Forms' என்ற தலைப்பிலமைந்த இந்நிகழ்ச்சி Access Braille அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், சென்னையிலுள்ள பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பாடசாலையாகிய 'லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்' வளாகத்தில் இருந்த பிரெய்ல் மற்றும் பிற சாதனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

செல்வன். விக்ரம் பாரதி தோற்றுவித்த CMAY, இந்நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியை லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டுக்கு நன்கொடையாக அளிக்கிறது.

ஆறுமணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்நிகழ்ச்சியில் நம் நாட்டின் பலவகைப் பாரம்பரிய இசையும் நடனமும் இடம்பெற்றன. 'நிருத்யலய தர்ப்பண்' அமைப்பின் ஸ்ரீமதி. சுதா கிருஷ்ணன், 'நிருத்யார்ப்பணா டான்ஸ் அகாடமி' பள்ளியின் ஸ்ரீமதி. ரூபா ஆனந்த் ஆகியோர் தத்தமது மாணவர்களுடன் சிறப்பான நாட்டியங்களை வழங்கி மகிழ்வித்தனர். ஸ்ரீமதி. நவ்யா நடராஜன் அவர்களின் மாணவி செல்வி. மீரா சுரேஷ் 'இடதுபதம் தூக்கி' என்ற பாடலுக்கு சிறப்பாக ஆடினார்.
கர்நாடக இசைக் கலைஞர் திருமதி. காயத்ரி சத்யா தம் இனிய குரலால் அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தார். அவர் பாடிய 'சாந்தி நிலவவேண்டும்' மெய்சிலிர்க்க வைத்தது. அவருடைய மாணவர்களும் பங்கேற்றுப் பாடினர். 'ராஜ்குரு சங்கீத் வித்யாநிகேதன்' பள்ளியின் பிரபல ஹிந்துஸ்தானிய வித்வான் திரு. நசிகேதா யாக்கண்டி மிக இனிமையாகப் பாடினார். அவரது மாணவர்களும் பங்கேற்றுப் பாடினர். 'ஒடிசி' நாட்டியக் கலைஞர் திருமதி. நிஹாரிகா மொஹந்தியும் அவரது மாணவர்களும் 'தீரசமீரே யமுனா தீரே' என்ற அஷ்டபதிக்கு ஆடியது அற்புதம். 'சந்தம் யூத் கம்பெனியின்' மாணவர்கள் சுழன்று ஆடிய கதக் நடனம் அனைவரையும் மகிழச் செய்தது. சாக்ஸபோன் இசைக்கருவியில் திரு. பிரஷாந்த் ராதாகிருஷ்ணன் அற்புதமாகக் கர்நாடக இசை வாசித்தார்.

தலைசிறந்த கலைவடிவங்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக அளித்ததில் CMAYயின் இளைய உறுப்பினர்களுக்கு, திரு. ஸ்ரீநிவாஸ் ஜலதங்கி, திரு. பிரசன்னா ரங்கநாதன், திரு. சங்கர் வெங்கட்ராமன், திரு.விஷ் கணபதி, திரு. சாய் கிருஷ்ணன் மற்றும் சாய் கோயில் தன்னார்வலர்கள் உதவி செய்தார்கள்.

சுதா லக்ஷ்மிநாராயணன்,
கூப்பர்டினோ
More

TNF ஆஸ்டின்: வெள்ள நிவாரண நிகழ்ச்சி
நேஷ்வில்: பொங்கல் விழா
டெலவர்: பொங்கல் விழா
NETS: பொங்கல் விழா
GATS: பொங்கல் விழா
டாலஸ்: பொங்கல் விழா
TMM: பொங்கல் விழா
சிகாகோ தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
பாரதி கலை மன்றம்: பொங்கல் விழா
பாரதி தமிழ்க்கல்வி: பொங்கல் விழா
GOD: ராமனுஜம்ஜி சத்சங்கங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline