Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
SaaPaaSaa (India)

Comments Home
Comments by SaaPaaSaa (6)
Article: மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கைதவமோ அன்றிச் செய்தவமோ
Category: ஹரிமொழி (Oct 2017) Posted On: Oct 09, 2017
ஹரிகிருஷ்ணன் அவர்களே, வணக்கம். பின்னூட்டம் அளிக்காவிட்டாலும் நான் உங்கள் பதிவுகளைத் தவறாமல் படித்துக்கொண்டுதான் வருகிறேன். இந்த இதழில் வெளியான உங்கள் பதிவைப் படிக்கும்போது உச்ச நீதிமன்றத்தில் மிகவும் முக்கியமானதொரு கேசில் விவாதம் நடப்பதை நான் நேரில் பார்ப்பது போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. - VParthasarathy

Article: தம் மக்கள்
Category: ஹரிமொழி (Oct 2016) Posted On: Oct 06, 2016
மகனை இழந்த தந்தையின் துயர் அபிமன்யுவை இழந்த அர்ஜுனனுக்கு மட்டும் உரியதல்ல. இத்தருணத்தில் ஸ்ரீஹரி அவர்களின் துயராற்றும் சொற்கள் என்வசம் இல்லை. இப்பெரும் சோகத்தினின்றும் மீண்டு வர ஆண்டவனே அவருக்கு மனோபலம் தருவாராக.

Article: மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்
Category: ஹரிமொழி (Oct 2015) Posted On: Oct 26, 2015
ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் விளக்கமான பதில் கண்டேன். ஒரு விளக்கத்தை ஆதாரத்துடன் தர நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் ஸ்ரத்தையும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன. மிக்க நன்றி. இப்படிக்கு, ஸாபாஸா .

Article: மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்
Category: ஹரிமொழி (Oct 2015) Posted On: Oct 06, 2015
அன்புள்ள ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். இந்த மாதக்கட்டுரை கண்டேன். "ஆழமான மடு கோடைக்காலத்தில் அடியில் குளிர்ச்சியாகவும் மேலே உஷ்ணமாகவும் இருப்பது போல்" என்பது திருதிராஷ்ட்ரன் மனநிலையைக் காட்ட நல்ல உதாரணம். ரசித்தேன். ஒரு சந்தேகம் துளிர்க்கிறது:- பொதுவாக சுரங்கம் என்பது குனிந்தவண்ணம் ஒருவன் மட்டுமே செல்லக்கூடிய சிறிய பாதையாக இருக்கும். அதில் பீமன் மற்ற ஐவரைத் தூக்கிக்கொண்டு விஸ்தாரமாக செல்வது எங்ஙனம் சாத்தியம் ? வெளியில் வந்தபிறகு வேண்டுமானால் தூக்கிக்கொண்டு சென்றிருக்கலாம். இந்த சுரங்கத்தை விதுரரின் ஆட்கள் எவ்வளவு நாட்களில் அமைத்து முடித்தனர் என்ற தகவல் ஏதும் உள்ளதா? இப்படிக்கு உங்கள் - ஸாபாஸா.

Article: மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எரிந்த மாளிகை
Category: ஹரிமொழி (Sep 2015) Posted On: Sep 07, 2015
அன்புள்ள ஹரிக்ருஷ்ணன் அவர்களுக்கு, உங்கள் விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி. எனக்காக ஒரு முழு இதழ் ஒதுக்கியது வருத்தமாக இருக்கிறது. நீங்கள் எழுதுவதே மாதம் ஒருமுறை. கதையின் தேக்கத்திற்கு நான் காரணமாக விரும்பவில்லை. மற்ற வாசகர்கள் என்னை, பார்லிமெண்டை முடக்கிய எதிர்க்கட்சியைப் போல் காண்பார்கள். தயை கூர்ந்து கமெண்ட்ஸ் பகுதியிலேயே பதில் தரவும். இப்படிக்கு, ஸா பா ஸா .

Article: மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகை வாசம்
Category: ஹரிமொழி (Aug 2015) Posted On: Aug 22, 2015
திரு ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். என் தமையன் திரு சின்னஸ்வாமியின் தூண்டுதலின் பேரில் நான் சமீபத்தில் தென்றல் பத்திரிக்கையின் உறுப்பினராகி உங்கள் பகுதியை ஆவலுடன் படித்து வருகிறேன். என் சந்தேகம்:- உடனே தீப்பிடிக்கக்கூடிய பல பொருட்களைக்கொண்டு பாண்டவர்கள் வருவதற்கு முன்பே அரக்கு மாளிகையை உருவாக்கித் தயார் நிலையில் வைத்திருந்த புரோசனன், பாண்டவர்களின் வாசம் ஆனபின்பும் அந்த மாளிகையைக் கொளுத்த எதற்காக ஒரு வருஷ காலம் காத்திருந்தான் (நம் ஜனாதிபதி கருணை மனுவைப் பரிசீலிக்க எடுத்துக்கொள்ளும் அவகாசம் போல)? - சாத்தனூர் பார்த்த சாரதி (SaaPaaSaa).





© Copyright 2020 Tamilonline