தெரியுமா?: உலக ஜூனியர் இறகுப்பந்து சேம்பியன்ஷிப்பில் கோகுல்
|
|
தெரியுமா?: ஆஷ்ரிதா மற்றும் அக்ஸீதி ஈஸ்வரன் |
|
- வெங்கட்ராமன் சி.கே., மீனாட்சி கணபதி|டிசம்பர் 2016| |
|
|
|
|
ஆஷ்ரிதா ஈஸ்வரன் நவம்பர் 5 முதல் 13 வரை மான்ஸனில்லோ போர்ட், கோலிமா (மெக்ஸிகோ) நடைபெற்ற 'கான்டினென்டல் பெண்கள் செஸ்' போட்டிகளில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்று விளையாடினார். இந்த நவம்பரில் இவர் 16ம் வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுப் போட்டிகளில் 3வது இடத்தில் வந்து இவர் வெண்கலப் பதக்கம் வென்றார். அந்த அடிப்படையில் இவ்வாண்டு விளையாட வாய்ப்புக் கிடைத்தது. விமானம் தாமதமாகச் சென்றதன் காரணமாக முதல்சுற்றுப் போட்டியைத் தவறவிட்ட போதிலும் ஆஷ்ரிதா இப்போட்டிகளில் 8 வது இடத்தைப் பிடித்தார்.
ஆகஸ்ட் 2016ல், புவனேஸ்வரில் நடைபெற்ற உலக இளையோர் செஸ் போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்க அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். சென்ற ஆண்டு அமெரிக்கச் சிறுமியர் பட்டத்தை வென்றதன் அடிப்படையில் அணியில் இடம்பெற்றார். பெண்கள் பிரிவில், இவர் அமெரிக்காவின் முதல் 18 ஆட்டக்காரர்களுக்குள் இருக்கிறார். தற்போது ‘மகளிர் இன்டர்நேஷனல் மாஸ்டர்' (WIM) தகுதியை அடைந்துள்ள இவர் இன்னும் சில புள்ளிகள் வென்றால் 'மகளிர் கிராண்ட் மாஸ்டர்' ஆகிவிடுவார். ஆஷ்ரிதா சான் ஹோஸே, கலிஃபோர்னியாவில் உள்ள நாட்டர் டாம் உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்புப் படித்து வருகிறார். |
|
|
இவரது பத்துவயது சகோதரி அக்ஸீதி ஈஸ்வரன், சமீபத்தில் ஜார்ஜியாவின் பட்டூமியில் நடைபெற்ற FIDE இளையோர் செஸ் போட்டிகளில் U-10 வயதுப் பிரிவில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்றார். தற்போது U-10 மகளிர் பிரிவில் தேசிய அளவில் நான்காம் இடத்தில் உள்ளார். 4 வயதில் செஸ் விளையாடத் தொடங்கிய இவர், வாரத்தில் 14 மணிநேரம் பயிற்சிக்குச் செலவிடுகிறார். சான் ஹோஸேயின், ஸ்டார்ஃபோர்டு பள்ளியில் 5ம் வகுப்புப் படிக்கும் இவர், தனது மூத்த சகோதரி ஆஷ்ரிதா தான் முன்னுதாரணம் என்கிறார்.
இருவரும் பெற்றோருடன் சான் ஹோஸே, கலிஃபோர்னியாவில் வசித்துவருகின்றனர்.
தகவல்: சி.கே. வெங்கட்ராமன் தமிழில்: மீனாட்சி கணபதி |
|
|
More
தெரியுமா?: உலக ஜூனியர் இறகுப்பந்து சேம்பியன்ஷிப்பில் கோகுல்
|
|
|
|
|
|
|