|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|அக்டோபர் 2013| |
|
|
|
1) பாலாவின் வயதைவிட மாலாவின் வயது தற்போது இரு மடங்கு அதிகம். 12 வருடங்களுக்கு முன்னால் மாலாவின் வயது, பாலாவின் வயதை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. பாலா, மாலாவின் தற்போதைய வயதுகள் என்ன?
2) 1, 4, 27, 256........ வரிசையில் அடுத்து வரக் கூடிய எண், எது ஏன்?
3) சங்கர் விளையாட்டாக சில சிலந்திகளையும், வண்டுகளையும் பிடித்து ஒரு டப்பாவில் அடைத்திருந்தான். அவற்றின் மொத்த எண்ணிக்கை 9; அவற்றின் கால்களின் எண்ணிக்கை 60 என்றால் சிலந்திகள் எத்தனை, வண்டுகள் எத்தனை?
4) ஒரு பெட்டியில் 20 ரொட்டிகள் இருந்தன. அவற்றை ஆண்களுக்குத் தலா 2 வீதமும், பெண்களுக்குத் தலா 1 வீதமும், மீதமுள்ள குழந்தைகளுக்கு தலா 1/2 பங்கு வீதமும் பிரித்துக் கொண்டனர். ரொட்டியின் எண்ணிக்கையும் அவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தது என்றால் ஆண், பெண், குழந்தைகள் எத்தனை பேர் அதனைப் பகிர்ந்து கொண்டனர்?
5) ஒருவனிடம் 50 நாணயங்கள் இருந்தன. அவற்றை தினந்தோறும் தனது சேமிப்பு உண்டியலில் போட்டு வந்தான். முதல்நாள் எத்தனை நாணயங்களை உண்டியலில் போட்டானோ அதைவிட 3 நாணயங்கள் அதிகமாக அடுத்த நாள் போடுவான். ஐந்தாம் நாள் உண்டியலில் நாணயத்தைப் போட்டதும் அவன் கையிருப்பு தீர்ந்துவிட்டது. அப்படியானால் அவன் தினம் தோறும் எத்தனை நாணயங்களை உண்டியலில் செலுத்தி வந்திருப்பான்?
அரவிந்த் |
|
விடைகள் 1) பாலாவின் வயது = x மாலாவின் வயது = 2x 12 வருடங்களுக்கு முன்னால் பாலாவின் வயது = x - 12 12 வருடங்களுக்கு முன்னால் மாலாவின் வயது = 2x - 12 12 வருடங்களுக்கு முன்னால் மாலாவின் வயது = பாலாவின் வயதை விட மூன்று மடங்கு அதிகம் என்றால் = 3x = x
= 3(x-12) = 2x - 12 = 3x-36 = 2x - 12 = 3x - 2x = -12 + 36 x = 24
பாலாவின் வயது = 24; மாலாவின் வயது = 2 x 24 = 48 (இரு மடங்கு) 12 வருடங்களுக்கு முன்னால் பாலாவின் வயது = 24-12 = 12; மாலாவின் வயது = 48-12 = 36 (மும்மடங்கு)
2) அடுத்து வரக் கூடிய எண் = 3125. 1, 2, 3, 4 என எண்களின் வரிசை அதன் அடுக்குகளின் மடங்குகளில் அமைந்துள்ளது. 1^1, 2^2, 3^3 4^4 என்ற வரிசையில் அடுத்து வர வேண்டியது 5^5 = 3125;
3) சிலந்திகளுக்கு எட்டுக் கால்கள்; வண்டுகளுக்கு ஆறு கால்கள். மொத்தம் 60 கால்கள் அவற்றின் கூட்டுத்தொகை 9 என்றால் = 3 சிலந்திகள் (3 x 8 = 24), 6 வண்டுகள் (6 x 6 = 36); 3 + 6 = 9; 24 + 36 = 60 கால்கள்.
4) ரொட்டியின் எண்ணிக்கை = 20 ஆண்களுக்கு = 2 பெண்களுக்கு = 1 குழந்தைகளுக்கு = 1/2 ரொட்டியின் எண்ணிக்கையும், பெறுபவர்களின் எண்ணிக்கையும் சமம் = ரொட்டி = பெறுபவர்கள் = 20 என்றால்
4 x 2 = 8 8x 1 = 8 8 x 1/2 = 4 --- ---------- 20 = 20 ஆக ஆண்கள் 4 பேர்; பெண்கள் 8 பேர், குழந்தைகள் 8 பேர் ரொட்டிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
5) முதல் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x இரண்டாம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 3 மூன்றாம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 6 நான்காம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 9 ஐந்தாம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 12
ஆக மொத்த நாணயங்களின் எண்ணிக்கை = 5x + 30 = 50. 5x = 50 - 30 = 20; 5x = 20 என்றால், x = 4.
ஆகவே அவன் முதல் நாள் 4 நாணயங்களையும், ஐந்தாம் நாள் வரை 7, 10, 13, 16 என மொத்தம் ஐம்பது நாணயங்களையும் உண்டியலில் போட்டிருப்பான். |
|
|
|
|
|
|
|