|
கணிதப்புதிர்கள் |
|
- அரவிந்த்|செப்டம்பர் 2013| |
|
|
|
1) 3, 1, -1, 2, -3, 3, ...... தொடரில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
2) ஒரு வியாபாரி ஒரு வெங்காய மூட்டை வாங்கினார். அவர் வாங்கியதும் அதன் விலை 25% அதிகரித்து விட்டது. ஆனால் விற்கும்போது அதன் விலை 20% சரிந்து விட்டது. அவருக்குக் கிடைத்தது லாபமா, நட்டமா?
3) வட்டமாக நின்று கொண்டிருந்த மாணவர்களின் வரிசையில் ராஜா 41வது ஆளாக இருந்தான். அவனுக்கு நேர் எதிரே நின்றிருந்த சுரேஷ் 93வது ஆளாக இருந்தான் என்றால், நின்று கொண்டிருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
4) ஆலமரத்தில் தங்கியிருக்கும் பறவைகளைப் போல வேப்பமரத்தில் தங்கியிருக்கும் பறவைகளின் எண்ணிக்கை எட்டு மடங்கு. இரண்டு மரப் பறவைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் வரும் தொகையும், பெருக்கினால் வரும் தொகையும் ஒன்றுக்கொன்று தலை கீழ் எண்ணாக இருக்கின்றன என்றால் அப்பறவைகளின் எண்ணிக்கை என்ன?
5) ஒரு சதுர வேலியை அமைக்க ஒவ்வொரு பக்கத்திற்கும் 12 தூண்கள் தேவைப்படுகின்றன என்றால் இரண்டு தொடர் சதுர வேலிகளை அமைக்க மொத்தம் எத்தனை தூண்கள் தேவைப்படும்?
அரவிந்த் |
|
விடைகள் 1) அடுத்து வர வேண்டிய எண் = -5. வரிசை 1, 2, 3 என ஏறு வரிசையிலும், -1, -3 என்று ஒற்றை இலக்கங்களின் ஏறு வரிசையிலும் இருப்பதால் அடுத்து வர வேண்டிய எண் = -5.
2) வியாபாரி வாங்கிய விலை ரூ. 100 என்க. அதிகரித்த விலை = 25% = 100 + 25 = 125. அவர் விற்ற போது சரிவு = 20% = 125*20% = 125 - 25 = 100 நூறு ரூபாய்க்கு வாங்கிய வியாபாரி 100 ரூபாய்க்கே விற்றதால் அவருக்குக் கிடைத்தது லாபமும் இல்லை; நஷ்டமுமில்லை.
3) இதற்கு n = (n1 - n2) X 2 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ராஜா = n2 = 41 சுரேஷ் = n1 = 93
ஃ (93 - 41) X 2 = 52 X 2 = 104. ஆக வரிசையில் நின்று கொண்டிருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 104.
4) ஆலமரத்துப் பறவைகள் = 3 அவற்றின் எட்டு மடங்கு = வேப்ப மரத்துப் பறவைகள் = 3 x 8 = 24 அவற்றின் கூட்டுத் தொகை = 3 + 24 = 27 அவற்றின் பெருக்குத் தொகை = 3 x 24 = 72 27ன் தலைகீழ் எண் = 72.
5) ஒரு பக்கத்துக்கு 12 தூண்கள். நான்கு பக்கங்களுக்கு 12x4 = 48; சதுரம் என்பதால் முதல் தூணே அடுத்த வரிசைக்கும் முதல் தூணாக இருக்கும் அதன்படி 48-4 = 44 தூண்கள் தேவைப்படும். இரண்டு வேலிகள் அமைக்க 2x44 = 88 தேவைப்படும். ஆனால் தொடர் சதுரம் என்பதால் 1 வரிசைத் தூண்களே இரண்டு சதுரங்களுக்கும் பொதுவாக அமையும். அதன்படி 88-12 = 76; மொத்தம் 76 தூண்கள் தேவைப்படும். |
|
|
|
|
|
|
|