|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|ஆகஸ்டு 2013| |
|
|
|
1. ஒரு பாட்டில் நெய்யின் எடை 2 கிலோ இருந்தது. அதில் பாதி அளவு தீர்ந்ததும் எடை பார்த்தபோது 1200 கிராம் இருந்தது. அப்படியானால் பாட்டிலின் எடை என்ன?
2. 0, 1, 1, 2, 3, 5, 8, 13, .... வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்?
3. உமாவிடம் சில கிளிகளும், சில கூண்டுகளும் இருந்தன. ஒவ்வொரு கூண்டிலும் நான்கு கிளிகளை அடைத்தால் ஒரு கூண்டு மீதம் இருந்தது. ஒவ்வொரு கூண்டிலும் மூன்று கிளிகளை அடைத்தால் ஒரு கிளி மீதம் இருந்தது. கூண்டுகள் எத்தனை, கிளிகள் எத்தனை? 4. ஒரு பெட்டியில் 8 பந்துகள் இருந்தன. அவற்றில் ஒன்று மட்டும் எடை அதிகமானது. தராசு கொண்டு இரண்டே முயற்சிகளில் எடை அதிகமான பந்தைக் கண்டுபிடிப்பது சாத்தியமா, ஆம் எனில் எப்படி?
5. ராமு, சோமு, ராதா, கீதா ஆகியோர் சில ஆப்பிள்களை வைத்திருந்தனர். அவற்றின் மொத்த எண்ணிக்கை 66. ராமுவிடம் சோமுவிடம் இருந்ததை விட 4 மடங்கு அதிகமாக இருந்தது. ராதா, ராமுவை விட 3 அதிக ஆப்பிள்களை வைத்திருந்தாள். கீதா, ராதாவை விட 3 மடங்கு குறைவாக ஆப்பிள்களை வைத்திருந்தாள். சோமுவிடம் இருந்தது 6 ஆப்பிள்கள் என்றால் மற்றவர்கள் வைத்திருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை என்ன?
அரவிந்த் |
|
விடைகள் 1. பாட்டிலின் எடை = x நெய்யின் எடை = y
பாட்டில் + நெய்யின் எடை = 2 கிலோ = x + y = 2000 கிராம் -> (1)
பாதி அளவு தீர்ந்ததும் எடை = 1200 கிராம் = x + (y/2) = 1200 = 2x + y = 2400 -> (2)
2x + y = 2400 (-) x + y = 2000 ------------------------- x = 400 ------------------------- பாட்டிலின் எடை = 400 கிராம்
2. வரிசையில் அடுத்து வரும் எண் 21. முதல் இரண்டு எண்களின் கூட்டுத் தொகையே அடுத்த எண்ணாக வருமாறு வரிசை அமைந்துள்ளது. 0 + 1 = 1; 1 + 2 = 3; 2 + 3 = 5 ....... இந்த வரிசையின்படி அடுத்து வர வேண்டிய எண் 8 + 13 = 21.
3. கிளிகள் = x கூண்டுகள் = y
ஒவ்வொரு கூண்டிலும் நான்கு கிளிகளை அடைத்தால் ஒரு கூண்டு மீதம் = x = 4(y - 1) -> (1) ஒவ்வொரு கூண்டிலும் மூன்று கிளிகளை அடைத்தால் ஒரு கிளி மீதம் = x = 3y + 1 -> (2)
x = 4(y - 1) = 4y - 4
4y - 4 (-) 3y + 1 ------------------ y = 5
x = 4y - 4 = 4(5) - 4 = 20 - 4 = 16
கிளிகள் = 16 கூண்டுகள் = 5
4. சாத்தியமே! முதலில் தராசின் இரு தட்டுக்களிலும் மூன்று மூன்று பந்துகளை வைக்க வேண்டும். எடை சமம் என்றால் தராசு நிலையாக இருக்கும். ஏதேனும் ஒன்றில் எடை அதிகம் என்றால் அத்தட்டு தாழ்வாக இருக்கும். அதில் இருக்கும் பந்துக்களில் இரண்டு பந்துகளை ஒவ்வொரு புறமும் தராசில் இட, எடை சமம் என்றால் மூன்றாவது பந்து எடை அதிகமானது. அல்லது ஒன்று தாழ்ந்தால் அது எடை அதிகமானது. அது போல மூன்று மூன்று பந்துகளை தராசில் வைக்க எடை சமம் எனும்போது மீதி இருக்கும் பந்துகளில் இரண்டை ஒவ்வொரு புறமும் தராசில் இட, எடை சமம் என்றால் மூன்றாவது பந்து எடை அதிகமானது. அல்லது ஒன்று தாழ்ந்தால் அது எடை அதிகமானது. இதன் மூலம் இரண்டே வாய்ப்புகளில் எடை அதிகமான பந்தை கண்டுபிடிக்கலாம்.
5. மொத்த ஆப்பிள்கள் = 66
சோமுவிடம் இருந்தது = 6. ராமு, சோமுவை விட 4 மடங்கு அதிகம் வைத்திருந்தான் என்றால் 6 x 4 = 24.
ராதா, ராமுவை விட 3 அதிகம் = 24 + 3 = 27.
கீதாவிடம் இருந்தது ராதாவை விட 3 மடங்கு குறைவு என்றால் = 27 / 3 = 9. ஆக, ராமு, சோமு, ராதா, கீதா ஆகியோர் முறையே 24, 6, 27, 9 ( = 66) ஆப்பிள்களை வைத்திருந்தனர். |
|
|
|
|
|
|
|