கணிதப் புதிர்கள்
1. ஒரு பாட்டில் நெய்யின் எடை 2 கிலோ இருந்தது. அதில் பாதி அளவு தீர்ந்ததும் எடை பார்த்தபோது 1200 கிராம் இருந்தது. அப்படியானால் பாட்டிலின் எடை என்ன?

2. 0, 1, 1, 2, 3, 5, 8, 13, .... வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்?

3. உமாவிடம் சில கிளிகளும், சில கூண்டுகளும் இருந்தன. ஒவ்வொரு கூண்டிலும் நான்கு கிளிகளை அடைத்தால் ஒரு கூண்டு மீதம் இருந்தது. ஒவ்வொரு கூண்டிலும் மூன்று கிளிகளை அடைத்தால் ஒரு கிளி மீதம் இருந்தது. கூண்டுகள் எத்தனை, கிளிகள் எத்தனை?

4. ஒரு பெட்டியில் 8 பந்துகள் இருந்தன. அவற்றில் ஒன்று மட்டும் எடை அதிகமானது. தராசு கொண்டு இரண்டே முயற்சிகளில் எடை அதிகமான பந்தைக் கண்டுபிடிப்பது சாத்தியமா, ஆம் எனில் எப்படி?

5. ராமு, சோமு, ராதா, கீதா ஆகியோர் சில ஆப்பிள்களை வைத்திருந்தனர். அவற்றின் மொத்த எண்ணிக்கை 66. ராமுவிடம் சோமுவிடம் இருந்ததை விட 4 மடங்கு அதிகமாக இருந்தது. ராதா, ராமுவை விட 3 அதிக ஆப்பிள்களை வைத்திருந்தாள். கீதா, ராதாவை விட 3 மடங்கு குறைவாக ஆப்பிள்களை வைத்திருந்தாள். சோமுவிடம் இருந்தது 6 ஆப்பிள்கள் என்றால் மற்றவர்கள் வைத்திருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com