கணிதப்புதிர்கள்
1) 3, 1, -1, 2, -3, 3, ...... தொடரில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

2) ஒரு வியாபாரி ஒரு வெங்காய மூட்டை வாங்கினார். அவர் வாங்கியதும் அதன் விலை 25% அதிகரித்து விட்டது. ஆனால் விற்கும்போது அதன் விலை 20% சரிந்து விட்டது. அவருக்குக் கிடைத்தது லாபமா, நட்டமா?

3) வட்டமாக நின்று கொண்டிருந்த மாணவர்களின் வரிசையில் ராஜா 41வது ஆளாக இருந்தான். அவனுக்கு நேர் எதிரே நின்றிருந்த சுரேஷ் 93வது ஆளாக இருந்தான் என்றால், நின்று கொண்டிருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

4) ஆலமரத்தில் தங்கியிருக்கும் பறவைகளைப் போல வேப்பமரத்தில் தங்கியிருக்கும் பறவைகளின் எண்ணிக்கை எட்டு மடங்கு. இரண்டு மரப் பறவைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் வரும் தொகையும், பெருக்கினால் வரும் தொகையும் ஒன்றுக்கொன்று தலை கீழ் எண்ணாக இருக்கின்றன என்றால் அப்பறவைகளின் எண்ணிக்கை என்ன?

5) ஒரு சதுர வேலியை அமைக்க ஒவ்வொரு பக்கத்திற்கும் 12 தூண்கள் தேவைப்படுகின்றன என்றால் இரண்டு தொடர் சதுர வேலிகளை அமைக்க மொத்தம் எத்தனை தூண்கள் தேவைப்படும்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com