|
|
1. 29, 11, 47 96, 15, 87 42, ?, 15 மேற்கண்ட வரிசையில் - ? - இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?
2. ஒரு பந்து மற்றும் மட்டையின் மொத்த விலை $1.10. பந்து மற்றும் மட்டைக்கு இடையே உள்ள விலை வித்தியாசம் $1/- என்றால் பந்தின் விலை என்ன, மட்டையின் விலை என்ன?
3. சுந்தர் 12 கேக்குகளை 6 நிமிடங்களில் சாப்பிட்டு விடுவான். சுரேஷ் 15 கேக்குகளை 10 நிமிடங்களில் சாப்பிட்டு விடுவான். இருவரும் சேர்ந்து 21 கேக்குகளைச் சாப்பிட எத்தனை நிமிடங்கள் ஆகும்?
4. எட்டு 8களைப் பயன்படுத்தி 1000 வரச் செய்ய வேண்டும். இயலுமா?
5) A, B என்ற இருவரிடமும் இருக்கும் டாலரின் மொத்த எண்ணிக்கை 80/-. Cயிடம் இருக்கும் தொகையில் ஐந்தில் ஒரு பாகம் மட்டுமே Aயிடம் இருக்கிறது. Bயை விட அதிகமாக 5 மடங்கு தொகை Cயிடம் உள்ளதென்றால், A, B, C மூவரிடமும் இருக்கும் தொகை எவ்வளவு?
அரவிந்த் |
|
விடைகள் 1. வரிசையின் முதல் மற்றும் இறுதி எண்களைக் கூட்ட, நடுவில் உள்ள எண் வருகிறது (2 + 9 = 11; 4 + 7 = 11; 9 + 6 = 15; 8 + 7 = 15) ஆக, வரிசையில் வர வேண்டிய எண் : 4 + 2 = 6; 1 + 5 = 6)
2. பந்தின் விலை $0.5; மட்டையின் விலை $1.5/-
3. சுந்தர் 12 கேக்குகளை 6 நிமிடங்களில் சாப்பிட்டு விடுகிறான் எனில் அவன் 1 கேக்கினைச் சாப்பிட ஆகும் நேரம் = 6/12 = 1/2 சுரேஷ் 15 கேக்குகளை 10 நிமிடங்களில் சாப்பிட்டு விடுகிறான் எனில் அவன் 1 கேக்கினைச் சாப்பிட ஆகும் நேரம் = 10/15 = 2/3 இருவரும் சேர்ந்து 1 கேக்கினைச் சாப்பிட ஆகும் நேரம் = 1/2 + 2/3 = 4 + 3 / 2 = 7/2 = 2/7 இருவரும் சேர்ந்து 1 கேக்கினைச் சாப்பிட ஆகும் நேரம் = 2/7 இருவரும் சேர்ந்து 21 கேக்கினைச் சாப்பிட ஆகும் நேரம் = 21 ஜ் 2/7 = 42/7 = 6 சுந்தர், சுரேஷ் இருவரும் சேர்ந்து 21 கேக்குகளை 6 நிமிடத்தில் சாப்பிடுவார்கள்.
4. இயலும். 888 + 88 + 8 + 8 + 8 =1,000
5) A + B = 80; A = x என்க; Cயிடம் இருக்கும் தொகையில் ஐந்தில் ஒரு பாகம் மட்டுமே Aயிடம் இருக்கிறது எனில் C = 5x; Bயை விட அதிகமாக 5 மடங்கு தொகை Cயிடம் உள்ளதென்றால், B = C/5 = 5x/5 A + B = 80 ; x + 5x/5 = 80 = 5x + 5x / 5 = 80 = 10x/5 = 80 10x = 80 x 5 = 400 x = 400 / 10 = 40 ஆக, Aயிடம் இருப்பது $40/- Bயிடம் இருப்பது = 80 - A = 80 - 40 = $40 Cயிடம் இருப்பது = C = A x 5 = 40 x 5 = $200 |
|
|
|
|
|
|
|