|
கணிதப்புதிர்கள் |
|
- அரவிந்த்|டிசம்பர் 2013| |
|
|
|
1) விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?
4 3 2 5 3 5 1 1 6 1 2 8 3 3 1 7 2 8 4 3 9 ? 3
2) 1 முதல் 9 வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட எண்களின் வரிசையில் முதல் வரிசை எண்களைப் போல் இரண்டு மடங்காக இரண்டாவது வரிசை எண்கள் அமைந்துள்ளன. மூன்று மடங்காக மூன்றாவது வரிசை எண்கள் அமைந்துள்ளன.அந்த எண்கள் எவை?
3) 1, 9, 9 மற்றும் 6 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி, கூடவே +, -, ×, /, √, ^ குறிகளையும் பயன்படுத்தி 100 மற்றும் 1000 உருவாக்க வேண்டும். இயலுமா?
4) 1 முதல் 6 வரை உள்ள எண்களை மட்டும் பயன்படுத்திக் கீழே உள்ள முறையில் சமன்பாட்டை நிறைவு செய்திட வேண்டும். இயலுமா?
... × ... = ...
5) A, B, C என்னும் மூவரும் வியாபாரிகள். A, B இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 1000 ரூ விற்பனை ஆகிறது. B, C இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 900 ரூ விற்பனை ஆகிறது. A, C இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 600 ரூ விற்பனை ஆகிறது. அப்படியானால் தனித்தனியாக ஒவ்வொருவரும் செய்த விற்பனைத் தொகை எவ்வளவு?
அரவிந்த் |
|
விடைகள் 1) வரிசையின் நடுவில் உள்ள எண் முன், பின் உள்ள எண்களின் கூட்டுத் தொகையில் பாதியாக வருமாறு வரிசை அமைந்துள்ளது 4 + 2 = 6/2 = 3; 5 + 3 + 1 +1 = 10/2 = 5; ..... ஆக, வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டியது = 9 + 3 = 12/2 = 6.
2) அந்த எண்கள்...
192, 384 (192 + 192), 576 (192 + 192 + 192) 219, 438 (219 + 219), 657(219 + 219 + 219). 273, 546 (273 + 273), 819 (273 + 273 + 273) 327, 654 (327 + 327), 981 (327 + 327 + 327)
3) இயலும்.
1 + √(9) + 96 = 100 (1+9) ^ (9-6) = 1000
4) இயலும். 3 × 54 = 162
5) A + B = 1000 B + C = 900 A + C = 600
A + B = 1000 A + C = 600
2A + B + C = 1600 2A = 1600 - (B + C) = 1600 - 900 = 700;
A = 350; ஃ B = 650 ; C = 250 |
|
|
|
|
|
|
|