1) விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?
4 3 2
5 3 5 1 1
6 1 2 8 3 3 1
7 2 8 4 3
9 ? 3
2) 1 முதல் 9 வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட எண்களின் வரிசையில் முதல் வரிசை எண்களைப் போல் இரண்டு மடங்காக இரண்டாவது வரிசை எண்கள் அமைந்துள்ளன. மூன்று மடங்காக மூன்றாவது வரிசை எண்கள் அமைந்துள்ளன.அந்த எண்கள் எவை?
3) 1, 9, 9 மற்றும் 6 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி, கூடவே +, -, ×, /, √, ^ குறிகளையும் பயன்படுத்தி 100 மற்றும் 1000 உருவாக்க வேண்டும். இயலுமா?
4) 1 முதல் 6 வரை உள்ள எண்களை மட்டும் பயன்படுத்திக் கீழே உள்ள முறையில் சமன்பாட்டை நிறைவு செய்திட வேண்டும். இயலுமா?
... × ... = ...
5) A, B, C என்னும் மூவரும் வியாபாரிகள். A, B இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 1000 ரூ விற்பனை ஆகிறது. B, C இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 900 ரூ விற்பனை ஆகிறது. A, C இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 600 ரூ விற்பனை ஆகிறது. அப்படியானால் தனித்தனியாக ஒவ்வொருவரும் செய்த விற்பனைத் தொகை எவ்வளவு?
அரவிந்த்
விடைகள்1) வரிசையின் நடுவில் உள்ள எண் முன், பின் உள்ள எண்களின் கூட்டுத் தொகையில் பாதியாக வருமாறு வரிசை அமைந்துள்ளது 4 + 2 = 6/2 = 3; 5 + 3 + 1 +1 = 10/2 = 5; ..... ஆக, வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டியது = 9 + 3 = 12/2 = 6.
2) அந்த எண்கள்...
192, 384 (192 + 192), 576 (192 + 192 + 192)
219, 438 (219 + 219), 657(219 + 219 + 219).
273, 546 (273 + 273), 819 (273 + 273 + 273)
327, 654 (327 + 327), 981 (327 + 327 + 327)
3) இயலும்.
1 + √(9) + 96 = 100
(1+9) ^ (9-6) = 1000
4) இயலும். 3 × 54 = 162
5) A + B = 1000
B + C = 900
A + C = 600
A + B = 1000
A + C = 600
2A + B + C = 1600
2A = 1600 - (B + C) = 1600 - 900 = 700;
A = 350; ஃ B = 650 ; C = 250