|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|அக்டோபர் 2020| |
|
|
|
1. 1, 4, 9, 18, 35, ? வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
2. அது ஒரு மூன்று இலக்க எண். அதனை இரண்டால் பெருக்கினால் வரும் எண், அதே மூன்று இலக்க எண்ணை இரண்டால் கூட்டினால் வரும் எண்ணின் தலைகீழ் எண்ணாக இருக்கிறது. அந்த எண் எது என்று சொல்ல முடியுமா?
3. A, B, C, D ஆகியோரின் சராசரி வயது பத்து வருடங்களுக்கு முன் 45. A, B, C, D, X ஆகியோரின் தற்போதைய சராசரி வயது 49 என்றால் X-ன் தற்போதைய வயது என்ன?
4. அது, சில பகா எண்களின் வரிசை. அவை, 1 முதல் 9 வரை உள்ள இலக்கங்களைக் கொண்டுள்ளன. அவற்றை ஒன்றுடன் ஒன்று கூட்டினால் வரும் விடையும் பகா எண்ணாக இருக்கிறது என்றால் அந்த எண்களின் வரிசை எப்படி அமைந்திருக்கும்?
5. ஒரு பணியை 38 ஆண்கள் 16 மணி நேரத்தில் முடிக்கின்றனர். அதே பணியை 24 ஆண்கள் செய்தால் எத்தனை மணி நேரத்தில் முடிப்பர்?
அரவிந்த் |
|
விடைகள் 1. வரிசை x, 2x+2 (1x2+2=4), 2x+1 (4x2+1=9), 2x+0 (9x2+0=18), X2-1(18X2-1=35) என்ற வகைமையில் அமைந்துள்ளது. ஆகவே வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் = 2x-2 = 35x2-2 = 68. அடுத்து வரவேண்டிய எண் = 68.
2. அந்த எண் = 497. 497 X 2 = 994; 497 + 2 = 499. 994ன் தலைகீழ் எண் = 499.
3. பத்து வருடங்களுக்கு முன் A, B, C, D ஆகியோரின் சராசரி வயது = 45; பத்து வருடங்களுக்கு முன் அவர்களின் மொத்த வயது = 4 x 45 = 180. தற்போது A, B, C, D ஆகியோரின் வயதின் கூடுதல் = 180 + (4x10) = 180 + 40 = 220 A, B, C, D, X ஆகியோரின் தற்போதைய சராசரி வயது = 49 A, B, C, D, X ஆகியோரின் தற்போதைய மொத்த வயது = 5x49 = 245. X-ன் தற்போதைய வயது = 245-220 = 25.
4. அந்த எண்களின் வரிசை கீழ்கண்டவாறு அமைந்திருக்கும். 2 + 3 + 5 + 47 + 61 + 89 = 207.
5. 38 ஆண்கள் பணியை முடிக்க ஆகும் நேரம் = 16 மணி நேரம். 24 ஆண்கள் பணியை முடிக்க ஆகும் நேரம் = x 38 : 16 :: 24 : x = ? (38 x 24) = (16 x x)x = (38 X 24) / 16x = 912/16x; x = 57. 24 ஆண்கள் பணியை முடிக்க ஆகும் நேரம் = 57 மணி நேரம். |
|
|
|
|
|
|
|