|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|செப்டம்பர் 2020| |
|
|
|
1. 0, 1, 1, 2, 3, 5, 8, ... என்ற வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்? 2. அது, ஐம்பதிலிருந்து நூறுக்குள் உள்ள இரண்டு இலக்கமுள்ள ஒற்றைப்படை எண். அதன் தலைகீழ் எண் ஒரு சதுர எண். முதல் எண்ணின் பாதிதான் இரண்டாவது எண் என்றால் அந்த ஒற்றைப்படை எண் எது? 3. ஒன்று விட்டு ஒன்றாக உள்ள ஐந்து வீட்டுக் கதவு இலக்கங்களின் கூட்டுத் தொகை 75 என்றால் அந்த எண்கள் எவை? 4. கீதாவிடம் உள்ள ஆப்பிள்களை ஒவ்வொருவருக்கும் நான்கு எனப் பிரிக்கும்போது மூன்று ஆப்பிள்கள் மீதம் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஐந்து எனப் பிரிக்கும்போது நான்கு ஆப்பிள்கள் மீதம் இருக்கின்றன. கீதாவிடம் இருந்த மொத்த ஆப்பிள்களின் எண்ணிக்கை எவ்வளவு? 5. அனிதா மற்றும் லலிதாவின் வயது 3: 4 என்ற விகிதத்தில் உள்ளது. இருவரது வயதின் கூட்டுத்தொகை 63 என்றால் அவர்களின் வயது என்ன?
அரவிந்த் |
|
விடைகள் 1. முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகையே அடுத்த எண்ணாக வருமாறு வரிசை அமைந்துள்ளது. 0+1=1; 1+1=2; 1+2=3; 2+3=5; 3+5=8 என்ற வரிசையின்படி அடுத்து வர வேண்டிய எண் = 5+8=13.
2. அந்த எண் ஐம்பதிலிருந்து நூறுக்குள் இருக்க வேண்டும்; அதன் தலைகீழ் எண் ஒரு சதுர எண்; முதல் எண்ணின் பாதி தான் இரண்டாவது எண் என்ற மேற்கண்ட மூன்று விதிமுறைகளுக்கும் பொருந்திவரும் ஒரே எண் = 63. 63ன் தலைகீழ் எண் = 36 = சதுர எண். இரண்டாவது எண் = முதல் எண்ணின் பாதி = 6/2 = 3.
3. இந்தப் புதிருக்கு விடைகாண (n/5)-2^2 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். n=75. 22=2X2=4. 75/5=15. 15-4=11. வீட்டின் கதவு எண்கள் முறையே 11, 13, 15, 17, 19.
4. ஆப்பிள்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு; மீதம் = 3; ஆப்பிள்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து; மீதம் = 4; 4X+3 = 5X-4 20X = -4+3 = -1 x = -1 + 20 = 19 கீதாவிடம் இருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை = 19.
5. அனிதாவின் வயது = 3x லலிதாவின் வயது = 4x 3x + 4x = 63 7x = 63 x = 63/7 = 9 அனிதாவின் வயது = 3 x 9 = 27 லலிதாவின் வயது = 4 x 9 = 36 |
|
|
|
|
|
|
|