FeTNA வழங்கும் தமிழ் விழா 2007 சிகாகோ தியாகராஜ உத்ஸவம் - 2007 அர்ப்பணா டான்ஸ் குழுமம் வழங்கும் 'கிளாசிக் அர்ப்பணா 25' OSAAT வழங்கும் கங்கா-காவேரி மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா வருகை டொரண்டோ பல்கலைக்கழகம் நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு
|
|
|
2007 மே 6ஆம் நாளன்று 'இட்ஸ் டி·ப்' பண்பலை வானொலி நிகழ்ச்சியாளர் வழங்கும் 'சங்கமம்' என்ற விழா காம்பெல் கம்யூனிட்டி மையத்தில் மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சியை ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் தொகுத்து வழங்குவார். இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் வளைகுடாப் பகுதியின் பிரபல கலைஞர்கள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற இருக்கின்றன.
சான்·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வரும் வானொலி நிகழ்ச்சி 'இட்ஸ் டி·ப்' என்ற பண்பலை வானொலி நிகழ்ச்சியாகும். ஸ்டான்·போர்ட் பல்கலைக் கழகம் KZSU என்ற பண்பலை வானொலி நிலையத்தை அமைத்து நிகழ்ச்சிகளை அளித்து வருகிறது. இது 90.1 என்ற FM அலைவரிசையில் ஒலி பரப்பாகி வருகிறது. ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலான இடத்தை எடுத்துக் கொண்டு 'இட்ஸ் டி·ப்' என்ற நிகழ்ச்சியை ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் வழங்கி வருகிறார். இந்த ஒலிபரப்பு கில்ராய் நகரில் இருந்து ஓக்லாண்ட் வரை வளைகுடாப் பகுதி நகரங்கள் அனைத்திலும் தெளிவாகக் கேட்கிறது. இது லாபநோக்கற்ற அமைப்பு என்பதால் பொதுமக்களின் நிதி ஆதரவு, இந்தச் சேவையைத் தொடர்வதற்குப் பெரிதும் உதவி செய்யும்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராட்டி, குஜராத்தி என்று பல்வேறு இந்திய மொழி நிகழ்ச்சிகளை வழங்குகிறார். இதன் நூறாவது நிகழ்ச்சி நடைபெற்றதைக் கொண்டாடுவதற் காகவும், KZSU வானொலிக்கு நன்கொடை திரட்டும் முயற்சியாகவும் 'சங்கமம்' என்ற விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ரசிகர்களும் நண்பர்களும் இந்த வானொலிச் சேவையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோரும் கலந்து கொள்ள 'இட்ஸ் டி·ப்' அழைக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் திரட்டப் படும் நிதி KZSU வானொலிச் சேவையைத் தொடர்ந்து நடைபெறச் செய்வதற்காக வழங்கப் படும்.
'இட்ஸ் டி·ப்' பற்றி மேலும் அறிய: www.itsdiff.com
சங்கமம் நிகழ்ச்சி மற்றும் நுழைவுச் சீட்டு பற்றிய விபரங்களுக்கு: http://www.itsdiff.com/100.html |
|
நுழைவுச் சீட்டுகளுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசிகளிலும் தொடர்பு கொள்ளலாம்: வேணு 510.579.7541 ஸ்ரீகாந்த் 510 676 6274 ஆர்த்தி 650 400 3696 அஞ்சு 408 834 9581 பிரபா 650 346 6746
ராஜன் சடகோபன் |
|
|
More
FeTNA வழங்கும் தமிழ் விழா 2007 சிகாகோ தியாகராஜ உத்ஸவம் - 2007 அர்ப்பணா டான்ஸ் குழுமம் வழங்கும் 'கிளாசிக் அர்ப்பணா 25' OSAAT வழங்கும் கங்கா-காவேரி மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா வருகை டொரண்டோ பல்கலைக்கழகம் நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு
|
|
|
|
|
|
|