|
|
1) ராமுவிற்கு மூன்று பிள்ளைகள். ஒவ்வொருவருக்கும் இடையே வயது வித்தியாசம் மூன்று. மூவரின் வயதையும் கூட்டினால் 24 வருகிறது என்றால் அவர்கள் ஒவ்வொருவரின் வயது என்ன?
2) 1, 3, 6, 10, 15, 21, ..... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
3) 18 (252) 28; 14 (168) 24; 22 ( ) 32.... இந்த எண் தொடரில் ( )க்குள் வர வேண்டிய எண் எது, ஏன்?
4) சோமு தனது மனைவியைவிட நான்கு வயது பெரியவன். அவன் மனைவியின் வயது மகனின் வயதைப்போல் நான்கு மடங்கு. மகனின் வயது நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நான்கு என்றால் சோமுவின் தற்போதைய வயது என்ன?
5) ஒரு பண்ணையில் சில பசுக்களும் சில கோழிகளுமாகச் சேர்த்து மொத்தம் 90 இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 222 என்றால் பசுக்கள் எத்தனை, கோழிகள் எத்தனை?
அரவிந்த் |
|
விடைகள் 1) மூவரின் மொத்த வயது = 24
மூவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் = 3
ஆக, x + (x+3) + (x+6) = 24 = 3x + 9 = 24 3x =24-9 = 15; x = 5
மூவரின் வயது முறையே 5,8,11.
2) ஒவ்வோர் எண்ணுடனும் 2,3,4,5,6 ஆகிய எண்கள் கூட்டப்பட்டுள்ளன. அதன்படி அடுத்து வர வேண்டிய எண் 21 + 7 = 28
3) முதல் இரண்டு எண்களின் பெருக்குத் தொகையின் பாதியே அடைப்புக்குறிக்குள் உள்ளது (18*28 = 504/2 = 252), (14*24 = 336/2 = 168) ஆக அடுத்து வரவேண்டியது = 22*32 = 704/2 = 352.
4) மகனின் வயது நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் = 4; தற்போதைய வயது = 4 + 4 = 8. மனைவியின் வயது, மகனைப்போல நான்கு மடங்கு = 8 x 4 = 32 சோமுவின் வயது = மனைவியின் வயதைவிட நான்கு அதிகம் = 32 + 4 = 36 சோமுவின் தற்போதைய வயது = 36,
5) பசுக்கள் = x; கோழிகள் = y. அவற்றின் மொத்த எண்ணிக்கை = x + y = 90; x பசுக்களின் கால்கள் எண்ணிக்கை = 4x; y கோழிகளின் கால்கள் எண்ணிக்கை = 2y 4x + 2y = 222...... (1) x + y = 90 x + y = 90 இதனை இரண்டால் பெருக்க = 2x + 2y = 180...... (2)
சமன்பாடு ஒன்றிலிருந்து இரண்டைக் கழிக்க = (4x + 2y)-(2x + 2y) = 2x = 222 - 180 = 42 x = 21 y = 90 - 21 = 69
கோழிகளின் எண்ணிக்கை = 69; பசுக்களின் எண்ணிக்கை = 21 |
|
|
|
|
|
|
|