Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
TNF தெற்கு ஃப்ளோரிடா: ஈகை விருந்து
BAFA: திருக்குறள் போட்டி - 2017
GOD: ஸ்ரீ ராமாநுஜம்ஜி விரிகுடாப்பகுதி வருகை
- ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த்|ஜனவரி 2017|
Share:
குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிடி / பே ஏரியா நாமத்வார் ஒவ்வொரு வருடமும் நடத்திவரும் மதுரமான உத்சவங்களின் வரிசையில், 2016 நவம்பர் முதல் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் பிரதான சீடர்களில் ஒருவரான பூஜ்யஸ்ரீ ராமாநுஜம்ஜி அவர்கள் அமெரிக்காவின் பல்வேறு இடங்களிலும் சம்பூர்ண மதுரகீத மஹாயக்ஞம் என்னும் தலைப்பில் நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். பக்தியோகம், ஸ்ரீமத் பாகவதம், ராமாயணம் பற்றிய சொற்பொழிவுகளும் நடத்திவருகிறார். இவற்றில் பள்ளிச் சிறுவர் சிறுமியரும் கலந்துகொண்டு பாடல்கள், பகவானின் புறப்பாடு போன்ற கைங்கரியங்களை செய்கின்றனர். இந்த உத்சவம் தவிர, குருஜியின் கீர்த்தனங்களில் 700க்கும் மேலான கீர்த்தனங்களைக் குழந்தைகள் பாடவுள்ளனர்.

2017 ஜனவரி 1 முதல் 7 வரை அட்லாண்டாவில் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜனவரி 11 முதல் 17 வரை சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் 'பக்தி யோகம்' என்னும் தலைப்பில் சொற்பொழிவு, ஆண்டாள் கல்யாணம் ஆகியவை சித்திவிநாயகா கல்சுரல் சென்டரில் (40155, Blacow ரோடு, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா) நடைபெற உள்ளன.

மேலும் பே ஏரியா நாமத்வார் / GOD சத்சங்கம் உங்கள் வீடுகளிலும் வந்து உங்கள் கோரிக்கைகள் நிறைவேற மஹாமந்திர கூட்டுப் பிரார்த்தனை நடத்துவார்கள். GOD USA என்ற அமைப்பின்மூலம் சாந்தீபனி குருகுலம் வேத பாடசாலைகளைப் பல ஊர்களில் நடத்திவருகிறது. இவற்றுக்கு ஆதரவு தர விரும்புவோர் 18304GODUSA அல்லது www.godivinity.org என்னும் வலையகத்தில் தொடர்பு கொள்க.
ஸ்ரீவித்யா ஸ்ரீகாந்த்,
பிளெசன்டன், கலிஃபோர்னியா
More

TNF தெற்கு ஃப்ளோரிடா: ஈகை விருந்து
BAFA: திருக்குறள் போட்டி - 2017
Share: 




© Copyright 2020 Tamilonline