|
கணிதப்புதிர்கள் |
|
- அரவிந்த்|பிப்ரவரி 2017| |
|
|
|
1) லீலாவின் வயதைப்போல் பாலாவின் வயது மும்மடங்கு. 12 வருடங்களுக்கு முன்னால் பாலாவின் வயது லீலாவின் வயதைப்போல் ஐந்துமடங்காக இருந்தது. பாலா, லீலாவின் தற்போதைய வயதுகள் என்ன?
2) 15, 35, 56, 78... வரிசையில் அடுத்து வருவது என்ன, ஏன்?
3) ஒரு விருந்து நிகழ்ச்சியில் 36 கைகுலுக்கல்கள் நிகழ்ந்தன என்றால் அதில் எத்தனை பேர் கலந்துகொண்டிருப்பர்?
4) 5 நான்குகளைப் பயன்படுத்தி பெருக்கியோ, வகுத்தோ, கூட்டியோ, கழித்தோ விடை 41 வரவழைக்க இயலுமா?
5) அது ஒரு நான்கு இலக்க எண். அந்த எண்ணுடன் ஒன்றைக் கூட்டினாலும், அதை இரண்டால் வகுத்து ஒன்றைக் கூட்டினாலும் வரும் விடை வர்க்க எண்களாக இருக்கின்றன எனில் அந்த எண் எது?
அரவிந்த் |
|
விடைகள் 1) லீலாவின் வயது = x பாலாவின் வயது = 3x 12 வருடங்களுக்கு முன்னால் லீலாவின் வயது = x - 12 12 வருடங்களுக்கு முன்னால் பாலாவின் வயது = 3x - 12 12 வருடங்களுக்கு முன்னால் பாலாவின் வயது, லீலாவின் வயதை விட ஐம்மடங்கு அதிகம் என்றால் = 5x = x = 5(x - 12) = 3x - 12 = 5x - 60 = 3x - 12 = 5x - 3x = -12 + 60 2x = 48 x = 24 லீலாவின் வயது = 24; பாலாவின் வயது = 3 x 24 = 72 (மும்மடங்கு); 12 வருடங்களுக்கு முன்னால் லீலாவின் வயது = 24-12 = 12; பாலாவின் வயது = 72-12 = 60 (ஐம்மடங்கு)
2) ஓர் எண்ணுக்கும் மற்றோர் எண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 20, 21, 22 என ஏறுவரிசையில் உள்ளது. அதன்படி அடுத்து வர வேண்டியது 78 + 23 = 101 ஆகும்.
3) கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை = n; மொத்தம் நிகழ்ந்த கைகுலுக்கல்கள் = 2n = 36
n(n-1)/2 = 36;
(n2 - n)/2 = 36
n2-n = 72;
9x9 – 9 = 72;
n = 9 ஆகவே விருந்தில் கலந்து கொண்ட மனிதர்களின் எண்ணிக்கை = 9
4) இயலும்
44-4 + 4/4 = 41
5) அந்த எண் = 1680
அதனுடன் ஒன்றைக் கூட்ட 1680 + 1 = 1681 = 41 x 41
இரண்டால் வகுத்து ஒன்றைக் கூட்ட = 1680 / 2 = 840 + 1 = 841 = 29 x 29 |
|
|
|
|
|
|
|