தெரியுமா?: ஆஷ்ரிதா மற்றும் அக்ஸீதி ஈஸ்வரன்
|
|
தெரியுமா?: உலக ஜூனியர் இறகுப்பந்து சேம்பியன்ஷிப்பில் கோகுல் |
|
- வெங்கட்ராமன் சி.கே., மீனாட்சி கணபதி|டிசம்பர் 2016| |
|
|
|
|
ஜூலை 2016ல் நடைபெற்ற அமெரிக்க தேசிய இறகுப்பந்து சேம்பியன் போட்டிகளில் U-19 பிரிவில் கோகுல் பட்டத்தை வென்றது நாம் அறிந்ததே. தகுதிப் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்து இவர் 'உலக ஜூனியர் சேம்பியன்ஷிப்' போட்டியில் அமெரிக்கப் பிரதிநிதியாக தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பங்கேற்று வருகிறார். இவ்வாண்டுக்கான போட்டிகள் ஸ்பெயின் நாட்டின் பில்பாவ் நகரில் நவம்பர் 1 முதல் 13ம் தேதிவரை நடைபெற்றன.
இதில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் விளையாட கோகுல் தகுதிபெற்றார். ஒற்றையர் பிரிவில், ஸ்லொவீனியாவின் முதன்மை ஆட்டக்காரரிடம், முதல் சுற்றில் தோற்றுப்போனார். இரட்டையர் பிரிவில் கோகுல்-ஸ்டீவன் டிங் ஜோடி, முதல்சுற்றில் போர்த்துக்கீசிய ஜோடியையும், இரண்டாம் சுற்றில் தென்னாப்பிரிக்க ஜோடியையும் வென்றனர். மூன்றாம் சுற்றில், சீன ஜோடியிடம் (Number 2 seed) தோற்றனர். |
|
இதில் உலகம் முழுவதிலுமிருந்து 170 சிறுவர்களும், 162 சிறுமியர்களும் கலந்துகொண்டனர். இந்தியாவின் லக்ஷ்யா சென் (சிறுவர்) மற்றும் ஷிகா கௌதம் (சிறுமியர்) ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றனர். சென்ற ஆண்டு பெரூவில் நடைபெற்ற போட்டிகளில் சிரில் வர்மா இறுதிச் சுற்றுவரை சென்று இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
விரைவில் கல்லூரி வாழ்வைத் தொடங்க இருக்கும் கோகுல், சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
தகவல்: சி.கே. வெங்கட்ராமன் தமிழில்: மீனாட்சி கணபதி |
|
|
More
தெரியுமா?: ஆஷ்ரிதா மற்றும் அக்ஸீதி ஈஸ்வரன்
|
|
|
|
|
|
|