Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
மாயாபஜார்
வெண்டைக்காய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி
டோ ஃபு பஜ்ஜி
ஆப்பிள் பஜ்ஜி
அஸ்பாரகஸ் பஜ்ஜி
முட்டை பஜ்ஜி
இட்டலி மாவு பஜ்ஜி
பன்னீர் பஜ்ஜி
பஜ்ஜி வகைகள்
- சரஸ்வதி தியாகராஜன்|ஜூன் 2006|
Share:
Click Here Enlargeபஜ்ஜி என்றால் ஹர்பஜன் சிங் நினைவுக்கு வந்தால் நீங்கள் கிரிக்கெட் ரசிகர். ஆனால் தீனிப் பிரியர்களுக்கு பஜ்ஜி என்றவுடன் வாழைக்காய், கத்தரிக்காய், உருளைக் கிழங்கு பஜ்ஜிகள்தாம் நினைவுக்கு வரும். பல புதுமையான பஜ்ஜிகளும் செய்யலாம்.

கடலை மாவு எண்ணெயில் வேகும்போது வரும் வாசனை இருக்கிறதே, ஆஹா! சொல்லி முடியாது. அப்போதே நாக்கில் எச்சில் ஊறிவிடும். மொறுமொறுப்பான பஜ்ஜியைத் தின்பது ஒரு சுகம்.

முதலில் பொதுவாக பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பஜ்ஜி

வாழைக்காய், ,உருளைக்கிழங்கு, பீட்ரூட், செளசெள, காரட், குடைமிளகாய், பெரிய வெங்காயம் போன்றவற்றில் பஜ்ஜி செய்யும் முறை இதோ. தோல் சீவ வேண்டியவற்றுக்குத் தோல் சீவி, காய்கறிகளை வேண்டிய வடிவில் மெல்லியதாகச் சீவி வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவர், ப்ராகோலி பூக்களையும் இம்முறைப்படி செய்யலாம். பெரிய வெங்காயத்தைத் தோல் நீக்காமல் வட்ட வடிவமாக வெட்டினால் வளையங்கள் பிரியாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கிண்ணம்
அரிசி மாவு - 1/8 கிண்ணம்
மைதா மாவு - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்ப் பொடி - 1 1/2 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை

காய்கறி, எண்ணெய் தவிர எல்லாப் பொருட்களையும் நன்றாக இட்டலி மாவுப் பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், நறுக்கிய காய்கறி வில்லையை ஒவ்வொன்றாக மாவில் இருபுறமும் தோய்த்து எண்ணெயில் போடவும். இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து வடியவைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்
More

வெண்டைக்காய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி
டோ ஃபு பஜ்ஜி
ஆப்பிள் பஜ்ஜி
அஸ்பாரகஸ் பஜ்ஜி
முட்டை பஜ்ஜி
இட்டலி மாவு பஜ்ஜி
பன்னீர் பஜ்ஜி
Share: 




© Copyright 2020 Tamilonline