|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|மார்ச் 2015| |
|
|
|
1) 1, -1, 2, -3, 3, ...... தொடரில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
2) கலாவின் வயதைவிட மாலாவின் வயது தற்போது இருமடங்கு அதிகம். 12 வருடங்களுக்கு முன்னால் மாலாவின் வயது, கலாவின் வயதைவிட மும்மடங்கு அதிகமாக இருந்தது. இருவரின் தற்போதைய வயதுகள் என்ன?
3) A, B, C என்ற மூன்று நபர்களின் வயதின் பெருக்குத்தொகை 48. அவர்களில் Cயின் வயது ஆறுவருடம் கழித்து 12 ஆகிறது. B, Aயைவிடப் பெரியவர் என்றால் ஒவ்வொருவரின் வயது என்ன?
4) ஒரு தோப்பில் ஒவ்வொரு பத்து தென்னை மரங்களுக்கும் நான்கு மா மரங்களை நட்டுள்ளனர். மாமரங்களின் எண்ணிக்கையைவிடத் தென்னை மரங்களின் எண்ணிக்கை 48 அதிகமாக உள்ளது என்றால் அந்தத் தோப்பில் இருந்த மாமரங்கள் எத்தனை, தென்னை மரங்கள் எத்தனை?
5) இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 136; அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் 24. அந்த எண்கள் எவை?
அரவிந்த் |
|
விடைகள் 1) அடுத்து வரவேண்டிய எண் = -5. வரிசை 1, 2, 3 என ஏறுவரிசையிலும், -1, -3 என்று ஒற்றை இலக்கங்களின் ஏறுவரிசையிலும் இருப்பதால் அடுத்து வர வேண்டிய எண் = -5.
2) கலாவின் வயது = X 12 வருடங்களுக்கு முன்னால் கலாவின் வயது = x - 12 12 வருடங்களுக்கு முன்னால் மாலாவின் வயது = 2x - 12 12 வருடங்களுக்கு முன்னால் மாலாவின் வயது, கலாவின் வயதை விட மும்மடங்கு அதிகம் என்றால் = 3x = x = 3(x-12) = 2x - 12 = 3x-36 = 2x - 12 = 3x - 2x = -12 + 36 x = 24 கலாவின் வயது = 24; லீலாவின் வயது = 2 x 24 = 48 (இரு மடங்கு) 12 வருடங்களுக்கு முன்னால் கலாவின் வயது = 24-12 = 12; மாலாவின் வயது = 48-12 = 36 (மும்மடங்கு)
3) A x B x C = 48 C-யின் வயது ஆறு வருடங்கள் கழித்து = 12 தற்போது = 12 - 6 = 6
A x B x C = 48 A x B = 48/C = 48/6 = 8 A x B = 8
A = 2 B = 4 C = 6 2 x 4 x 6 = 48;
4) மா மரங்கள் - 4 தென்னை மரங்கள் - 10
ஒவ்வொரு பத்துத் தென்னை மரத்திற்கும் நான்கு மா மரங்கள் என்றால் = 4/10 = 8/20 = 12/30 = 16/40 = 20/50 = 24/60 = 28/70 = 32/80 மாமரங்களைவிடத் தென்னை மரங்களின் எண்ணிக்கை 48 அதிகம் என்றால் 80 - 32 = 48; தென்னை மரங்கள் = 80 மா மரங்கள் = 32
5) இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 136, வித்தியாசம் 24 எனில்,
X + Y = 136 X - Y = 24 _____________ 2X = 160 X = 80 X + Y = 136 எனில் Y = 136 - X Y = 136 - 80 = 56 (வித்தியாசம் 24)
எனவே அந்த எண்கள் 80, 56 |
|
|
|
|
|
|
|