கணிதப் புதிர்கள்
1) 1, -1, 2, -3, 3, ...... தொடரில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

2) கலாவின் வயதைவிட மாலாவின் வயது தற்போது இருமடங்கு அதிகம். 12 வருடங்களுக்கு முன்னால் மாலாவின் வயது, கலாவின் வயதைவிட மும்மடங்கு அதிகமாக இருந்தது. இருவரின் தற்போதைய வயதுகள் என்ன?

3) A, B, C என்ற மூன்று நபர்களின் வயதின் பெருக்குத்தொகை 48. அவர்களில் Cயின் வயது ஆறுவருடம் கழித்து 12 ஆகிறது. B, Aயைவிடப் பெரியவர் என்றால் ஒவ்வொருவரின் வயது என்ன?

4) ஒரு தோப்பில் ஒவ்வொரு பத்து தென்னை மரங்களுக்கும் நான்கு மா மரங்களை நட்டுள்ளனர். மாமரங்களின் எண்ணிக்கையைவிடத் தென்னை மரங்களின் எண்ணிக்கை 48 அதிகமாக உள்ளது என்றால் அந்தத் தோப்பில் இருந்த மாமரங்கள் எத்தனை, தென்னை மரங்கள் எத்தனை?

5) இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 136; அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் 24. அந்த எண்கள் எவை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com