வாஷிங்டன்: 'ஓடிபோலாமா' ஐடியல் கிட்ஸ் ஆண்டு விழா கச்சேரி: மாளவிகா ஸ்ரீராம் நாட்ய தாரா: இசை, நடன நிகழ்ச்சி
|
|
சிகாகோ: வறியோர்க்கு உணவு |
|
- வ. ச. பாபு|ஏப்ரல் 2014| |
|
|
|
|
|
மார்ச்சு 16, 2014 அன்று நண்பகல் 12:00 மணிக்கு அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புக்கள் மூன்றும் இணைந்து வசந்தத்தை வரவேற்க இந்த ஆண்டின் இரண்டாவது 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை Hesed House (659 S. River Road, Aurora, IL: 60506; வலையகம்: www.hesedhouse.org) ஏதிலியர் இல்லத்தில் நடத்தினர். இளயோர் பிரின்டெட், இரித்திக், அஞ்சனா, நேயா, பாரி, ஆதவ், இராகா, அகிலா, பிரமிளா, கெளசல்யா, பிரியா, திருவாளர்கள். சாக்ரடீசு, தணிகாசலம், கணேசன், சுந்தர், பிரபு ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புற நிறைவேற்றி வைத்தனர். சில இளையோரின் பெற்றோரும் இதில் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது.
உணவு மட்டுமல்லாது திருக்குறளின் அதிகாரங்கள் நான்கின் விளக்கமும், பழம்பெரும் வெளிநாட்டறிஞர்கள் தமிழர் குறித்துக் கூறிய சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்புப் புத்தகமும் அளிக்கப்பட்டன. உணவு வழங்கிய தமிழ் மாணக்கர்களும், அவர்தம் பெற்றோர்களும் வசந்தத்தை வரவேற்று, சித்திரைத் திருநாளையும் போற்றி, நிறுவனத்தின் பொறுப்பாளர் திருவாட்டி. சிண்டி அவர்கட்கு நன்றி கூறி விடை பெற்றனர். |
|
வ.ச. பாபு, சிகாகோ, இல்லினாய்ஸ் |
|
|
More
வாஷிங்டன்: 'ஓடிபோலாமா' ஐடியல் கிட்ஸ் ஆண்டு விழா கச்சேரி: மாளவிகா ஸ்ரீராம் நாட்ய தாரா: இசை, நடன நிகழ்ச்சி
|
|
|
|
|
|
|