வாஷிங்டன்: 'ஓடிபோலாமா' கச்சேரி: மாளவிகா ஸ்ரீராம் சிகாகோ: வறியோர்க்கு உணவு நாட்ய தாரா: இசை, நடன நிகழ்ச்சி
|
|
|
|
|
மார்ச் 22, 2014 அன்று, குழந்தைகளுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனமான Ideal Kids நடத்திய மூன்றாம் ஆண்டு திறனறி போட்டிகள், மிஷன் சான் ஹோசே எலிமெண்டரி பள்ளியில் டாக்டர் லூயிஸ் ஃபோலான் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. குழந்தைகளின் உடல்நலம், மனவலிமை, அறிவுத்திறன் மற்றும் ஒழுக்கப் பண்புகளை மேம்படுத்த ஐடியல் கிட்ஸ் செயல்பட்டு வருகிறது. இப்போட்டியில் 5 முதல் 17 வயதுவரை உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 220 குழந்தைகள் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியம் வரைதல் ஆகியவற்றில் பங்கேற்றனர். வயதின் அடிப்படையில் போட்டிகள் தரம் பிரிக்கப்பட்டிருந்தன.
மேடைப்பேச்சு, உடனடிப் பேச்சு என இரண்டு தனிப்பிரிவுகளில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதுபோன்ற மேடைகள் குழந்தைகளின் கூச்ச சுபாவத்தைப் போக்கி, ஆளுமைத் திறனை வளர்க்கும் என்பதை மெய்ப்பித்தது. கட்டுரைப் போட்டியில் குழந்தைகள் பதிவு செய்தவை கருத்துச் செறிவும் ஆராய்ச்சி சிந்தனையும் கொண்டதாக இருந்தன.
ஓவியங்கள் அழகுடன், தத்ரூபமாக அமைந்திருந்தன. விழாவின் நிறைவாகப் போட்டியாளர்களும் அவர்களது பெற்றோர்களும் விழாக் குழுவினரோடு கருத்துப் பரிமாறிய விதம் ஐடியல் கிஸ் நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது நிச்சயம். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகயருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. |
|
அப்துல்லா கான், கலிஃபோர்னியா |
|
|
More
வாஷிங்டன்: 'ஓடிபோலாமா' கச்சேரி: மாளவிகா ஸ்ரீராம் சிகாகோ: வறியோர்க்கு உணவு நாட்ய தாரா: இசை, நடன நிகழ்ச்சி
|
|
|
|
|
|
|