Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
'குறளரசி' கீதா அருணாச்சலம்
இளம் சாதனையாளர்கள்
- |ஏப்ரல் 2014|
Share:
சங்கர் ஸ்ரீனிவாசன்
ஸ்டான்ஃபோர்டு மருத்துவப் பள்ளி (The Stanford School of Medicine) அண்மையில் நடத்திய முதல் வட்டார மூளைத் தேனீ (Stanford Regional Brain Bee) போட்டியில் செல்வன். சங்கர் ஸ்ரீனிவாசன் முதலாவதாக வந்தார். இதன்மூலம் அவர் தேசிய மூளைத் தேனீ போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றார். தேசிய அளவிலும் அவர் முதல் பத்து இடங்களுக்குள் வந்தது குறிப்பிடத் தக்க சாதனையாகும்.

Click Here Enlargeஸ்டான்ஃபோர்டு போட்டியில் கலந்துகொள்வோர் BrainFacts நூலை நன்றாகக் கற்றிருப்பதோடு, நரம்பு அறிவியல் (neuroscience), மூளைக்கூறியல் (brain anatomy), மூளை நோய்கள் எனப் பலவற்றைக் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். "இவை எல்லாவற்றையும் குறித்த மலைமலையான தகவல்களை அறிந்து மனதில் நிறுத்துவதற்கு நான் மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது" என்கிறார் சங்கர்.

நரம்பு அறிவியல், கூடைப்பந்து, பியானோ வாசித்தல் எனப் பலதுறை ஆர்வம் கொண்ட சங்கர், ஆர்ச்பிஷப் மிட்டி உயர்நிலைப் பள்ளியில் (சான் ஹோசே, கலிஃபோர்னியா) 12ம் நிலை படிக்கிறார். வரும் நாட்களில் உயிர்மருத்துவப் பொறியியல் (biomedical engineering), நரம்பியல், நரம்பு அறிவியல் போன்ற ஏதாவதொன்றில் மேற்கொண்டு படிக்க ஆர்வம் கொண்டிருக்கிறார்.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு அவர் கூறும் அறிவுரை: "கொடுக்கப்பட்ட நூலை மட்டும் படித்தால் போதாது. மூளை குறித்த உங்கள் அறிதலார்வத்தை விழிப்போடு வைத்திருக்க வேண்டும். படங்கள், அறிஞர்கள் விளக்க உரைகள் என்று பலவும் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. தாகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்கிறார்.

மேலும் அறிய:
http://oso.stanford.edu/programs/125-stanford-brain-bee
https://www.msu.edu/~brainbee/nbb.html

*****


ஆர்த்தி கணபதி & அமிர்தா ராம்
Click Here Enlargeஆர்த்தி கணபதியும் (International Community School), அமிர்தா ராமும் (Newport High School) தமது சியாடல் பகுதியின் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் செரினா அஹூஜா, சோன்யா அஹூஜா மற்றும் டயேன் டுவான் ஆகியோருடன் சேர்ந்து ஒரு குழுவாக இளம் தொழில்முனைவோருக்கான TiE Young Entrepreneur (TYE) போட்டியில் பங்கேற்றனர். காலடி வைக்கும் அழுத்தத்தில் ஏற்படும் இயக்க ஆற்றலை (Kinetic energy) மின்னாற்றலாக மாற்றும் இவர்களது பசுமைச் சக்தித் திட்டத்தை வணிகப்படுத்துவதற்காக EnviroTech என்ற நிறுவனத்தைத் தொடங்கித் தமது கருத்தாக்கத்தை வென்ச்சர் கேபிடல் முதலீட்டாளர்களிடம் கொண்டு செல்லத் திட்டமிட்டனர். 2013ல் மாநில அளவில் முதலிடம் பெற்றபின் உலக அளவில் கடுமையான போட்டிக்கிடையே இரண்டாமிடத்தைப் பெற்றனர் (பார்க்க: www.tie.org/tyeglobal).
சியாடலில் ஏஞ்சல் முதலீட்டாளர்களான Fast PItch நிறுவனம் நடத்திய போட்டியில் உயர்நிலைப் பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்று $1500 பரிசு வென்றனர். இவர்களது வணிகரீதியான முயற்சிக்கு இது தொடக்க முதலீடாக இருக்கும். மேலும் வென்ச்சர் முதலீட்டாளர், ஏஞ்சல் முதலீட்டாளர் போன்றவர்களை அணுகி அதிக நிதி பெறவும் முயன்று வருகின்றனர். தமது கருத்தாக்கம் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பது என்பதோடு வணிகச் செயல்பாட்டுக்கும் இயைந்தது என்று கருதும் இவர்களின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துவோம்.

*****


நடேஷ் வைத்தியநாதன்
Click Here Enlargeஓக்லஹோமா மாநிலம் டுல்சா நகர அரசு யூனியன் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் நடேஷ் வைத்தியநாதன் ஓக்லஹோமா மாநில அறிவியல் போட்டியில் (STEM-2014) முதல் பரிசு வென்றுள்ளார். மார்ச் 7, 2014 அன்று டுல்சாவின் எக்ஸ்போ ஸ்க்வேரில் Dove Science Academy நடத்திய அறிவியல் போட்டியில் நடேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பால் அருந்துவோர், பாலில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவிற்கேற்பத் தேவைப்படும் செரிமான நேரத்தை விளக்குவதற்கான அறிவியல் செய்முறையை நடேஷ் நிகழ்த்திக் காட்டினார். டிடெர்ஜண்ட் திரவம், உணவுச் சாயம் இவற்றுடன் வெவ்வேறு அளவில் கொழுப்புக் கொண்ட பால் நிறம்மாறும் விதத்தைக் கொண்டு அதை அவர் நிரூபித்தார்.

யூனியன் பள்ளி ஆசிரியை திருமதி. தார்ன்பர்க் லெஸ்லியின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைப்படி இதனை நடேஷ் முடிவுசெய்தார். நாசா (NASA) முன்னாள் விண்வெளி வீரரும், விண்வெளி ஆராய்ச்சியாளருமான திரு. ட்வேன் கேரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்திப் பரிசுகள் வழங்கினார்.
More

'குறளரசி' கீதா அருணாச்சலம்
Share: 




© Copyright 2020 Tamilonline