Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
எதிர்பாராமல் நடந்தது....
29வது சென்னை புத்தகக் காட்சி
ஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது
- அ. முத்துலிங்கம்|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlarge2005-ம் ஆண்டுக்கான இயல் விருது பேராசிரியர் ஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு வழங்கப்படுகிறது. கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசிய மையமும் இணைந்து இந்த விருதை

ஆண்டுதோறும் வழங்குகிறார்கள்.

ஜோர்ஜ் எல்.ஹார்ட் கலி·போர்னியா பல்கலைக் கழகத்தில் (பெர்க்லி) தமிழ்ப் பீடப் பேராசிரியராக பணியாற்றுகிறார். தமிழ்த்துறை உட்பட நான்கு தலைமைப் பீடங்களை அலங்கரிக்கும் இவர் ஆரம்பத்தில் விஸ்கொன்சின்

பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகக் கடமையாற்றியவர்.

இவருக்கு லத்தீன், கிரேக்கம், ரஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி உண்டு. பல இந்திய மொழி இலக்கியங்களிலும் பரிச்சயம் பெற்றிருக்கிறார்.

இவர் மொழிபெயர்த்த The Poems of The Tamil Anthologies (1979) நூல் The American Book Award-க்குப் பரிந்துரை செய்யப்பட்டது. The Four Hundred Songs of War and Wisdom (1999)

எனும் புறநானூறு மொழிபெயர்ப்பு தென்னாசிய மையத்தின் ஏ.கே. ராமானுஜன் பரிசைப் பெற்றது. இது தவிர The Forest Book of the Ramayana of Kampan (1988) (ஆரண்ய காண்டம் மொழிபெயர்ப்பு); The

Poems of Ancient Tamil (1975) என்று இன்னும் பல நூல்களை எழுதியிருக்கிறார். தற் பொழுது பதிற்றுப் பத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் இருக்கிறார்.
ஜோர்ஜ் ஹார்ட்டின் தமிழ் சேவை உலகறிந்தது. தமிழைச் செம்மொழியாக்க வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்டவர். செப்டம்பர் 2004-ல் இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அங்கீகரித்ததற்கு இவருடைய கடும்

முயற்சியும் ஒரு காரணம். பெர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம் நிறுவப்பட்டதற்கும் இவரே மூல காரணர். இன்று நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர் கள் இங்கே உயர் தமிழ்க் கல்வி பெறுவது டன் தீவிரமான தமிழ்

ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழின் தொன் மையையும், பெருமையையும் உலகத்துக்கு உணர்த்திய பெரியார்களில் இவர் முக்கியமானவர்.

இயல் விருது முதலாவது வருடம் சுந்தர ராமசாமிக்கும், இரண்டாவது வருடம் கே. கணேசுக்கும், மூன்றாவது வருடம் வெங்கட் சாமிநாதனுக்கும், நாலாவது வருடம் லண்டன் பத்மநாப ஐயருக்கும் வழங்கப்பட்டது. இந்தக்

கௌரவத்தில் 'இயல் விருது' கேடயமும், பணமுடிப்பு 1500 டாலரும் அடங்கும்.

வழமைபோல இம்முறையும் விருது விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக அரங்கில் எதிர்வரும் ஆனி மாதம் நடைபெறும்.

அ. முத்துலிங்கம்,
கனடா
More

எதிர்பாராமல் நடந்தது....
29வது சென்னை புத்தகக் காட்சி
Share: 




© Copyright 2020 Tamilonline