ஈழத்தமிழ்-அமெரிக்கப் பெண் கலி·போர்னியா வரித்துறைத் தலைவராக நியமனம் 'அவுட்ரீச்' ஆற்றிவரும் உதவி ஜெர்ஸி ரிதம்ஸ் Dr. பாலகிருஷ்ணனுக்கு அமெரிக்க ராணுவ ஆய்வு மானியம்
|
|
|
ஜனவரி 15, 2006 பொங்கல் தினத்தன்று பிரபல பாப் பாடகர் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது கைக்குழந்தையுடன் மாலிபூவில் (லாஸ் ஏஞ்சலஸ்) உள்ள வெங்கடேஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்தார். அங்கிருந்த கணேசர், ஈஸ்வரர், சுப்பிரமணியர், ராமர், கிருஷ்ணர், மஹாலக்ஷ்மி, ஆண்டாள் ஆகிய சன்னிதிகளில் கும்பிட்டார். தனது நெற்றியில் குங்குமப் பிரசாதத்தை இட்டுக்கொண்ட அவர், கோவில் அர்ச்சகர் வழங்கிய பட்டுப் பொன்னாடையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். குறிப்பாக வெங்கடேசப் பெருமாள் சன்னதியில் நெடுநேரம் நின்று தரிசித்தார். கோவில் நிர்வாகி வரதன், அர்ச்சகர்கள் நரசிம்ம பட்டர், கிருஷ்ணமாச்சார்லு ஆகியோர் உடனிருந்து சுற்றிக் காட்டி, சன்னதிகளில் அர்ச்சனைகள் செய்தனர்.
அன்று பொங்கல் தினம் என்பதால் முன்னதாக ஊஞ்சல், கல்யாண உற்சவம், விசேஷ அலங்காரம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். |
|
நரசிம்ம பட்டர், பென் காலின்ஸ் |
|
|
More
ஈழத்தமிழ்-அமெரிக்கப் பெண் கலி·போர்னியா வரித்துறைத் தலைவராக நியமனம் 'அவுட்ரீச்' ஆற்றிவரும் உதவி ஜெர்ஸி ரிதம்ஸ் Dr. பாலகிருஷ்ணனுக்கு அமெரிக்க ராணுவ ஆய்வு மானியம்
|
|
|
|
|
|
|