Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
BATM வழங்கிய 'பாரதிக்கு பரதாஞ்சலி'
மதுமிதா கோவிந்தராஜன் நாட்டிய அரங்கேற்றம்
ராகவாணியின் 'நவக்ரஹ கிருதி'
ராதிகா சங்கர் குழுவினரின் 'பரத நிருத்ய வைபவம்'
அஸ்வினி நாகப்பன் நடன அரங்கேற்றம்
நிவேதிதா ராவ் அரங்கேற்றக் கச்சேரி
அயோவாவில் ஸ்ரீருத்ரம்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
- சூப்பர் சுதாகர்|ஜூலை 2011|
Share:
2011 மே, ஜூன் மாதங்களில் அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சியாடல், சான் ஃபிரான்சிஸ்கோ-வளைகுடாப் பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், ஆல்பகர்க்கி,டாலஸ், கோரல்வில் (அயோவா), சிகாகோ ஆகிய இடங்களுக்கு வருகை புரிந்தார். அன்பே வடிவான அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்தார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, பஜனை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவுப் பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

"மிகச் சிறந்த பக்திக்கு இலக்கணமாகத் திகழ்பவன் பிரஹலாதன். பிரஹலாதனைப் போல் சிறந்த சமர்ப்பணம் உள்ள வேறொரு பக்தனைக் காண முடியாது. நமது பக்தி, 'பார்ட் டைம்' பக்தியாகும். ஏதாவது தேவை ஏற்பட்டால் நாம் இறைவனை நினைப்போம். தேவைகள் தீர்ந்துவிட்டால் இறைவனைப் பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை. நாம் விரும்பியது நடக்காமல் போய் விட்டாலோ நமது நம்பிக்கையை இழந்து விடுவோம். இதுவே நமது நிலை. ஆனால், எத்தனையோ இடையூறுகள் வந்தபோதும் பிரஹலாதன் மனம் தடுமாறவில்லை. ஒவ்வொரு இடையூறு வந்தபோதும் அவனது நம்பிக்கை அதிகரிக்கவே செய்தது," என்பது அம்மாவின் வாக்காகும்.
ஜூலை மாதத்தில் அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

நியூயார்க் 07.02 - 07.04
வாஷிங்டன் டி.சி. 07.06 - 07.07
பாஸ்டன் 07.10 - 07.13
டொரன்டோ, கனடா 07.15 - 07.18

மக்களின் மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்
More

BATM வழங்கிய 'பாரதிக்கு பரதாஞ்சலி'
மதுமிதா கோவிந்தராஜன் நாட்டிய அரங்கேற்றம்
ராகவாணியின் 'நவக்ரஹ கிருதி'
ராதிகா சங்கர் குழுவினரின் 'பரத நிருத்ய வைபவம்'
அஸ்வினி நாகப்பன் நடன அரங்கேற்றம்
நிவேதிதா ராவ் அரங்கேற்றக் கச்சேரி
அயோவாவில் ஸ்ரீருத்ரம்
Share: 




© Copyright 2020 Tamilonline