|
|
1. அது ஒரு மூன்று இலக்க எண். அதை இரண்டால் பெருக்கி, பெருக்குத் தொகையிலிருந்து ஒன்றைக் கழித்தால் அந்த மூன்று இலக்க எண்ணின் தலைகீழ் எண் விடையாக வருகிறது. அந்த மூன்று இலக்க எண் எது?
2. 121, 169, 225, .... வரிசையில் அடுத்து வரவேண்டியது எது, ஏன்?
3. அது ஒரு மூன்று இலக்க எண். முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 15. இரண்டு மற்றும் மூன்றாம் இலக்க எண்களின் கூட்டுத்தொகையும் 15. ஒன்று மற்றும் மூன்றாம் எண்களின் கூட்டுத்தொகை 16 என்றால் அந்த எண் எது?
4. மாணவர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அதில் முதலிலிருந்து எண்ணினாலும், இறுதியிலிருந்து எண்ணினாலும் பாபு 30வது ஆளாக நின்று கொண்டிருந்தான் என்றால், அந்த வரிசையில் நின்று கொண்டிருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
5. ஒரு படகில் 21 பெரியவர்களோ அல்லது 30 குழந்தைகளோ மட்டுமே பயணம் செய்ய முடியும். படகில் தற்போது 20 குழந்தைகள் உள்ளனர் என்றால் இன்னும் எத்தனை பெரியவர்களை படகில் ஏற்றிக் கொள்ள முடியும்?
அரவிந்த் |
|
விடைகள் 1. அந்த எண் 397. 397 x 2 = 794 794 - 1 = 793 = 397ன் தலைகீழ் எண்.
2. 121, 169, 225... = 112, 132, 152. ஆக வரிசையில் அடுத்து வர வேண்டியது 17^2 = 289
3. அந்த எண் = 878 8 + 7 = 15; 7 + 8 = 15; 8 + 8= 16. எனவே அந்த எண் 878.
4. (n x 2) - 1 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி இதற்கு விடைகாணலாம். n = 30; 30 x 2 = 60; 60 - 1 = 59. ஆக வரிசையில் நின்று கொண்டிருந்த மாணவர்களின் எண்ணிகை 59.
5. 21 பெரியவர்கள் = 30 குழந்தைகள். 30 குழந்தைகளுக்கு 21 பெரியவர்கள் சமம் என்றால் 20 குழந்தைகளுக்கு 14 பெரியவர்கள் சமம். 10 குழந்தைகளுக்கு 7 பெரியவர்கள் சமம். படகில் இருபது குழந்தைகள் உள்ளனர் என்பதால் மீதி 10 குழந்தைகளுக்குச் சமமான 7 பெரியவர்கள் மட்டும் படகில் ஏறிக்கொள்ள இயலும். |
|
|
|
|
|
|
|