|
|
1. ராமுவின் வயது சோமுவின் வயதைப் போல ஐந்துமடங்கு. ராஜாவின் வயது ராமுவின் வயதைப் போல ஐந்து மடங்கு அதிகம். டேவிடின் வயது ராமு, சோமு, ராஜா ஆகியோரின் மொத்த வயதுக்குச் சமம். டேவிடின் வயது 62 என்றால் மற்றவர்களின் வயது என்ன?
2. மணி ஒரு பள்ளி விடுதிக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த பெரிய மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் $10 அன்பளிப்பாகத் தந்தார். அதுபோல சிறிய மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் $6 கொடுத்தார். ஆனால் பெரிய மாணவர்களில் 40% பேர் அவர் அளித்த பணத்தைத் திரும்பக் கொடுத்து விட்டனர். மொத்தம் 300 நபர்களுக்கு அன்று மணி அன்பளிப்புத் தந்தார் என்றால் அவர் செலவழித்த மொத்தத் தொகை என்னவாக இருக்கும்?
3. மூன்றாண்டுகளுக்குப் பிறகு லதாவுக்கு என்ன வயதோ அதன் மும்மடங்கிலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன்னால் அவளுக்கு என்ன வயதோ அதன் மும்மடங்கைக் கழித்தால் லதாவின் தற்போதைய வயது கிடைக்கும் என்றால் லதாவின் வயது என்ன?
4. மாலினி போட்டித் தேர்வு ஒன்று எழுதினாள். அதில் மொத்தம் 50 கேள்விகள் இருந்தன. அவள் எல்லா கேள்விகளுக்கும் விடையளித்தாள். சரியான விடைக்கு 1 மதிப்பெண் தரப்பட்டாலும், தவறான விடைக்கு 2 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டன. மாலினி மொத்தம் 35 மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். அவள் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடையளித்திருப்பாள்?
5. 5, 1, 25, 3, 5, 1.... அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
அரவிந்த் |
|
விடைகள் 1. சோமுவின் வயது = a என்க ராமுவின் வயது = 5 x a = 5a ராஜாவின் வயது = 5 x 5a = 25a டேவிட்டின் வயது = a + 5a + 25a = 62; 31a = 62 a = 2. 2 + 10 + 50 = 62. எனவே சோமுவின் வயது 2; ராமுவின் வயது 10; ராஜாவின் வயது = 50.
2. பெரிய மாணவர்களுக்குக் கொடுத்தது = $10. 100 மாணவர்கள் என்று வைத்துக் கொண்டால் அதில் 40 மாணவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். சராசரியாக 10 டாலர் பெற்றுக் கொண்ட மாணவர் அதில் 4 டாலரைத் திருப்பித் தந்து விடுகிறார். $10 - 40% = $6; ஆக ஒவ்வொரு பெரிய மாணவரும் பெற்றுக் கொண்டது = $6; ஒவ்வொரு சிறிய மாணவரும் பெற்றுக் கொண்டது = $ 6 மொத்த நபர்கள் = 300 என்றால் மொத்தம் செலவான தொகை = 300 x 6 = 1800. ஜோசப் செலவழித்த தொகை = $1800/-
3. லதாவின் வயது = x 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவளது வயது = x + 3 அதன் மும்மடங்கு = 3(x + 3) 3 ஆண்டுகளுக்கு முன் அவளது வயது = x - 3 அதன் மும்மடங்கு = 3(x - 3) 3(x + 3) - 3(x - 3) = x (3x + 9) - (3x - 9) = x 3x - 3x + 18 = x x =18. லதாவின் தற்போதைய வயது = 18
4. சரியான விடைகள் = x தவறான விடைகள் = y x + y = 50 ---- ( I ) x - 2y = 35 ---- ( II ) ( I ) - ( II ) = 3y = 15 y = 5 x = 50-y = 50-5 = 45 மாலினி அளித்த சரியான விடைகள் = 45
5. முதல் எண் வரிசை 5, 25, 5 என்று உள்ளது அதாவது a, a^2, a என்ற வரிசையில் அமைந்துள்ளது. இரண்டாவது எண் வரிசை 1, 3, 1 என்ற வரிசையில் உள்ளது. ஆகவே a, a2, a வரிசையில் அடுத்து வர வேண்டியது a, a2, a, a3... ஆகவே அடுத்து வர வேண்டியது 125. |
|
|
|
|
|
|
|