|
|
|
1.இந்த வரிசை எண்களில் அடுத்து எந்த எண் வரும், ஏன்? 17, 15, 26, 22, 35, 29, ..., .... 2. ஒரு அரங்கத்தில் நிகழ்ந்த கலந்துரையாடலில் ஒவ்வொரு மனிதரும் மற்றவருடன் கைகுலுக்கி வரவேற்றனர். அதில் மொத்தம் 28 கைகுலுக்கள் நிகழ்ந்தன என்றால் எத்தனை பார்வையாளர்கள் அங்கே இருந்தனர்? 3. இந்த வரிசையில் நடுவில் வர வேண்டிய எண் எது, ஏன்? 5, 8, 13, ..., 34, 55, 89 4. தொடர்வரிசையில் உள்ள இரண்டு எண்களுக்கிடையே உள்ள வித்தி யாசம் 3. அவற்றின் வர்க்கத்தின் வித்தியாசம் 51 என்றால் அந்த எண்கள் யாவை?
அரவிந்தன் |
|
showdv(){document.getElementById('dvans').style.display='';}விடைகள் 1.44, 36 வரிசையில் முதல் எண்ணுடன் ஒன்பதைக் கூட்ட மூன்றாம் எண் வருகிறது. மூன்றாம் எண்ணான முப்பத்தைந்துடன் ஒன்பதைக் கூட்ட வரும் விடை = 44 வரிசையில் இரண்டாம் எண்ணுடன் ஏழினைக் கூட்ட நான்காம் எண் வருகிறது. நான்காம் எண்ணான இருபத்தொன்பதுடன் ஏழினைக் கூட்ட வரும் விடை = 36 ஆக விடை 44, 36
2. மொத்தம் நடந்த கை குலுக்கல்கள் =28 n(n-1)/2 = 28 n(n-1) = 28X2 = 56 n(n-1) = 56 n = 8 கலந்து கொண்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை = 8
3. விடை = 21 முதல் இரண்டு எண்களின் கூட்டுத் தொகையே மூன்றாம் எண். (5+8 = 13; 34+55 = 89) ஆதலால் 8+13ன் கூட்டுத்தொகையான 21 தான் நடுவில் வர வேண்டிய எண்.
4. அந்த எண்கள் = 7, 10 a-b = 3 (a)2 - (b)2 = 51 (a)2 - (b)2 = (a+b) (a-b) a-b = 3 (a+b) (a-b) = 51 (a+b) = 51/3 = 17 a+b = 17 கணக்கின் படி a-b = 3 a+b = 17 2 a = 20 a = 10 a-b = 3 என்றால் 10-b = 3 b = 7 ஆக விடை = 7, 10 கணக்கின் படி... a-b = 3 = (10-7 = 3) (a)2 - (b)2 = 51 = (10 X 10 =100) - (7 X 7 = 49) 100-49 = 51 |
|
|
|
|
|
|
|