|
|
|
1. ஒரு காட்டில் அருகருகே இரண்டு மரங்கள் இருந்தன. முதல் மரத்தில் சில பறவைகளும், இரண்டாம் மரத்தில் சில பறவைகளும் இருந்தன. முதல் மரத்தில் இருந்து ஒரு பறவை இரண்டாவது மரத்திற்குச் சென்றால் இரண்டு மரத் திலும் உள்ள பறவைகளின் எண்ணிக் கை சமமாகிவிடுகிறது. இரண்டாவது மரத்திலிருந்து ஒரு பறவை முதல் மரத்திற்கு வந்தால், முதல் மரத்தில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை இரண்டா வது மரத்தில் உள்ள பறவைகளின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்காகிவிடுகிறது. அப்படியென்றால் இரண்டு மரங்களிலும் எத்தனை பறவைகள் இருந்தன? 2. தாய்கள் இருவர் தங்கள் மகள்களுடன் துணிக்கடைக்குச் சென்றனர். அனை வரும் ஆளுக்கொரு புடவை வாங்கினர். ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது மொத்தம் மூன்று புடவைகள் தான் இருந்தன. கணக்கும் சரியாக இருந்தது. எப்படி? 3. ஒரு விவசாயி நதியைக் கடக்கக் காத்துக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு ஆடு இருந்தது. ஒரு ஓநாய் இருந்தது. கூடவே காரட் மூட்டை ஒன்றையும் வைத்திருந் தான். அங்குள்ள ஓடத்தின் மூலம் நதியைக் கடக்கலாம் என்றாலும் ஒரே சமயத்தில் இரு சுமைகள் மட்டுமே செல்ல முடியும். ஆட்டினையும் ஓநாயை யும் தனியாக விட்டுச் சென்றால் ஓநாய் ஆட்டை அடித்துத் தின்று விடும். ஆட்டினையும் காரட் மூட்டையையும் தனியாக விட்டுச் சென்றால் ஆடு, காரட் மூட்டையைக் காலி செய்து விடும். மேலும் நான்கு முறைக்கு மேல் ஓடத்தைப் பயன்படுத்தவும் முடியாது. ஆகவே அவன் ஒன்றும் புரியாமல் வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தான். பிறகு திடீரென முடிவு செய்து அனைத்துப் பொருட்களுடனும் அக்கரை சேர்ந்தான். அவன் எவ்வாறு அக்கறைக் குப் போயிருப்பான்? 4. ஒரு ஒன்று மற்றும் நான்கு ஏழுகளைப் பயன்படுத்தி (1,7,7,7,7) கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ நூறு விடை வருமாறுச் செய்ய வேண்டும். முடியுமா? 5. மாறனிடம் சில பந்துகளும் சில பெட்டி களும் இருந்தன. ஒவ்வொரு பெட்டியி லும் ஒன்பது பந்துகளைப் போட்டால் மீதி இரண்டு பெட்டிகள் காலியாக இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் ஆறு பந்துகளைப் போட்டால் மூன்று பந்துகள் மீதம் இருந்தன. அப்படியானால் பந்து கள் எத்தனை.. பெட்டிகள் எத்தனை..?
அரவிந்தன் |
|
விடைகள் 1.முதல் மரத்தில் இருந்த பறவைகள் = A=7; இரண்டாவது மரத்தில் இருந்த பறவைகள் = B=5 முதல் மரத்தில் இருந்து ஒரு பறவை பறந்து இரண்டாவது மரத்திற்குச் செல்ல; A-1 = B+1 == 7-1 = 5+1 = 6; (இரண்டு மரங்களிலும் பறவைகளின் எண்ணிக்கை சமமாகி விடுகிறது) இரண்டாவது மரத்தில் இருந்து ஒரு பறவை பறந்து முதல் மரத்திற்குச் செல்ல; B-1 = A+1 = 2B (இரண்டாவது மரத்தில் உள்ள பறவைகளைப் போல் இரு மடங்கு) 5-1 = 7+1 = 8; (முதல் மரத்தில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை (8) இரண்டாவது மரத்தில் உள்ள பறவைகளின் எண்ணிக்கையின் (4) இரு மடங்கு ஆகி விடுகிறது)
2.தாய்கள் இருவர் = A,B. இதில் A என்பவர் தாய்; B என்பவர் அவருக்கு மகள். அதே சமயம் Bக்கு ஒரு மகள் உண்டு, அவர் = C. A என்பவர் Bக்குத் தாயாகிறார். B என்பவர் Cக்குத் தாயாகிறார். ஆக மொத்தம் இரண்டு தாய்கள். B என்பவர் Aக்கு மகளாகிறார். C என்பவர் Bக்கு மகளாகிறார். ஆக மொத்தம் இரண்டு மகள்கள். இரண்டு தாயும் இரண்டு மகள்களுமாகிய A, B, C என்னும் மூவர் ஆளுக்கொரு புடவை வாங்கினால் மூன்று புடவைகள் மட்டுமே இருக்கும். எனவே கணக்கு சரியாகியது.
3.a) விவசாயி முதலில் ஆட்டினை தன்னுடன் ஏற்றிக் கொண்டு அக்கரைக்குச் சென்றான். இக்கரையில் ஓநாயும், காரட் மூட்டை மட்டும் தனித்திருந்தன. ஆட்டை அக்கரையிலேயே விட்டு விட்டு தான் மட்டும் தனியாகத் திரும்பினான். b) இரண்டாவது தவணையில் ஓநாயை தன்னுடன் கூட்டிச் சென்றான். ஓநாயை மறுகரையில் விட்டு விட்டு ஆட்டினை தன்னுடன் அழைத்துக் கொண்டு திரும்ப வந்தான். இப்போது ஒரு கரையில் ஓநாயும், மறு கரையில் காரட் மூட்டையும் இருந்தன. c) மூன்றாவது முறை பயணத்தில் ஆட்டினை இக்கரையில் விட்டு விட்டு காரட் மூட்டையுடன் பயணம் செய்து அக்கரைக்குச் சென்றான். இப்போது அக்கரையில் காரட் மூட்டையும், ஓநாயும் மட்டும் இருந்தன. விவசாயி தான் மட்டும் தனியாகத் திரும்பினான். d) நான்காவது முறை, கடைசி தவணைப் பயணத்தில் ஆட்டினை தன்னுடன் அழைத்துச் சென்றான். தன் புத்திசாலித்தனத்தினால் தன் உடைமைகள் எதற்கும் சேதாரம் ஏற்படாமல் அக்கறை சேர்ந்தான்.
4.a) 177 - 77 = 100 b) (7 + 7) X (7 + (1/7)) = 100 14 X (7 + 0.1429) = 14 X 7.1429 = 100
5.மொத்த பந்துகளின் எண்ணிக்கை = (a+b) X (a-b) = (9+6) X (9-6) = 15 X 3 = 45. ஒரு பெட்டிக்கு ஒன்பது பந்துகள் வீதம் வைக்க, பந்துகள் அனைத்தும் காலி = 9 X 5 = 45; இரண்டு பெட்டிகள் மட்டும் மீதம். ஆக, பெட்டிகளின் எண்ணிக்கை = 5 + 2 =7; ஒரு பெட்டிக்கு ஆறு பந்துகள் வீதம் வைக்க = 6 X 7 = 42; பெட்டிகள் அனைத்தும் நிரம்ப, மூன்று பந்துகள் மீதம். ஆகவே பந்துகள் 45. பெட்டிகள் 7 |
|
|
|
|
|
|
|