|
|
1. அது ஓர் இரட்டை இலக்க எண். அதன் சிற்றிலக்கங்களை ஒன்றோடு ஒன்று பெருக்கி வரும் விடையின் இரு மடங்கு தான் அந்த எண் என்றால் அந்த எண் எது?
2. அதுவும் இரட்டை இலக்க எண் தான். அதன் இலக்கங்களை ஒன்றோடு ஒன்று கூட்டி வரும் விடையின் இரு மடங்கு தான் அந்த எண் என்றால் அந்த எண் எது?
3. ராமுவின் வயதும் சோமுவின் வயதும் இரண்டு இலக்கங்கள் கொண்ட சதுர எண்ணாகும். இதில் ராமுவின் வயதின் வலப்பக்க எண்ணை (Unit) சோமு வயதின் முன்புறம் இட்டால் அது சோமுவின் வயதைக் குறிக்கும் சதுர எண்ணின் வர்க்கமாகிறது. அதே எண்ணைச் சோமுவின் வயதின் பின்புறம் இட்டால் அது ராமுவின் வயதைக் குறிக்கும் சதுர எண்ணின் வர்க்கமாகிறது என்றால் ராமு மற்றும் சோமுவின் வயது என்ன?
4. நான்கு எண்களின் கூட்டுத்தொகை 240. முதல் எண்ணை மூன்றால் பெருக்கி னாலும், இரண்டாவது எண்ணை மூன்றால் வகுத்தாலும், மூன்றாவது எண்ணோடு மூன்றைக் கூட்டினாலும், நான்காவது எண்ணிலிருந்து மூன்றைக் கழித்தாலும் வரும் தொகை அனைத்தும் சமம் என்றால் அந்த எண்கள் யாவை?
5. ஒரு மருத்துவமனையில் 728 நோயாளி கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர் களில் சிலர் பார்வையற்றவர்கள். சிலர் பேச முடியாதவர்கள். சிலர் கேட்க முடியாதவர்கள். 361 பேரால் பிறர் பேசுவதைக் கேட்க இயலாது. 479 பேரால் பேசமுடியாது என்றால் பார்வையற்றவர்கள் எத்தனை பேர்?
அரவிந்தன் |
|
விடைகள் 1. அந்த எண் 36. 3x6 = 18 அதன் இரு மடங்கு = 18x2 = 36
2. அந்த எண் 18. 1+8 = 9 அதன் இரு மடங்கு = 9x2 = 18
3. ராமுவின் வயது = 16 சோமுவின் வயது = 25 ராமுவின் வயதின் வலப்பக்க எண் 6. அதனை சோமுவின் வயதான 25-ன் முன்புறம் இட = 625. இது சோமுவின் வயதின் வர்க்கமாகும். (25x25 = 625) அதே வலப்பக்க எண்ணை சோமுவின் வயதின் பின்புறம் இட= 256. இது ராமுவின் வயதின் வர்க்கமாகும். (16x16 = 256)
4. அந்த எண்கள் =15, 135, 42, 48 15x3 = 45 135/3 = 45 42+3 = 45 48-3 = 45 15+135+42+48 = 240 ஆகவே அந்த எண்கள் = 15, 135, 42, 48
5. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை = 728 = N பேசுவதைக் கேட்க இயலாதவர்கள் = 361 = A பிறருடன் பேச முடியாதவர்கள் = 479 = B பார்வையற்றவர்கள் = (A+B)-N = (361+479)-728 = 112
|
|
|
|
|
|
|
|