கணிதப்புதிர்கள்
1. ஒரு காட்டில் அருகருகே இரண்டு மரங்கள் இருந்தன. முதல் மரத்தில் சில பறவைகளும், இரண்டாம் மரத்தில் சில பறவைகளும் இருந்தன. முதல் மரத்தில் இருந்து ஒரு பறவை இரண்டாவது மரத்திற்குச் சென்றால் இரண்டு மரத் திலும் உள்ள பறவைகளின் எண்ணிக் கை சமமாகிவிடுகிறது. இரண்டாவது மரத்திலிருந்து ஒரு பறவை முதல் மரத்திற்கு வந்தால், முதல் மரத்தில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை இரண்டா வது மரத்தில் உள்ள பறவைகளின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்காகிவிடுகிறது. அப்படியென்றால் இரண்டு மரங்களிலும் எத்தனை பறவைகள் இருந்தன?
2. தாய்கள் இருவர் தங்கள் மகள்களுடன் துணிக்கடைக்குச் சென்றனர். அனை வரும் ஆளுக்கொரு புடவை வாங்கினர். ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது மொத்தம் மூன்று புடவைகள் தான் இருந்தன. கணக்கும் சரியாக இருந்தது. எப்படி?
3. ஒரு விவசாயி நதியைக் கடக்கக் காத்துக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு ஆடு இருந்தது. ஒரு ஓநாய் இருந்தது. கூடவே காரட் மூட்டை ஒன்றையும் வைத்திருந் தான். அங்குள்ள ஓடத்தின் மூலம் நதியைக் கடக்கலாம் என்றாலும் ஒரே சமயத்தில் இரு சுமைகள் மட்டுமே செல்ல முடியும். ஆட்டினையும் ஓநாயை யும் தனியாக விட்டுச் சென்றால் ஓநாய் ஆட்டை அடித்துத் தின்று விடும். ஆட்டினையும் காரட் மூட்டையையும் தனியாக விட்டுச் சென்றால் ஆடு, காரட் மூட்டையைக் காலி செய்து விடும். மேலும் நான்கு முறைக்கு மேல் ஓடத்தைப் பயன்படுத்தவும் முடியாது. ஆகவே அவன் ஒன்றும் புரியாமல் வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தான். பிறகு திடீரென முடிவு செய்து அனைத்துப் பொருட்களுடனும் அக்கரை சேர்ந்தான். அவன் எவ்வாறு அக்கறைக் குப் போயிருப்பான்?
4. ஒரு ஒன்று மற்றும் நான்கு ஏழுகளைப் பயன்படுத்தி (1,7,7,7,7) கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ நூறு விடை வருமாறுச் செய்ய வேண்டும். முடியுமா?
5. மாறனிடம் சில பந்துகளும் சில பெட்டி களும் இருந்தன. ஒவ்வொரு பெட்டியி லும் ஒன்பது பந்துகளைப் போட்டால் மீதி இரண்டு பெட்டிகள் காலியாக இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் ஆறு பந்துகளைப் போட்டால் மூன்று பந்துகள் மீதம் இருந்தன. அப்படியானால் பந்து கள் எத்தனை.. பெட்டிகள் எத்தனை..?

அரவிந்தன்

விடைகள்

© TamilOnline.com