இன்னும் சாத வகைகள்.... சோள சாதம் வெந்தய சாதம் முட்டைக்கோஸ் சாதம் வெண்டைக்காய் சாதம் கறிவேப்பிலைப்பொடி சாதம் பூண்டுப்பொடி சாதம் கொத்துமல்லி சாதம் கீரை பாலாடைக்கட்டி சாதம் பாதாம் திராட்சை சாதம் குடமிளகாய் சாதம் ஆரஞ்சு முந்திரி சாதம் காஷ்மீரி புலவு மாங்காய் சாதம்
|
|
|
தேவையான பொருட்கள்
பாசுமதி சாதம் - 2 கிண்ணம் லவங்கப்பட்டை - ஒரு சிறிய துண்டு வெள்ளை வெங்காயம் - பொடியாக நறுக்கியது கிராம்பு - 3 முட்டை - 2 ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி பச்சைமிளகாய் (நறுக்கியது) - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை
முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்புச் சேர்த்து நன்றாகக் கடைந்து கொள்ளவும். ஒரு ஒட்டாத தாவாவில் (Non stick pan) எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கவும். இதில் கிராம்பு, லவங்கபட்டை, பச்சை மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து, வதங்கியபின் கடைந்த முட்டையைப் போட்டு அது வேகும் போதே அதை பொடிமாஸ் மாதிரி செய்து கொள்ளவும். இத்துடன் சாதத்தை தேவையான உப்பு போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும். சிறிது மிளகு பொடியும் சேர்த்து கலக்க ருசி கூடும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More