இன்னும் சாத வகைகள்.... சோள சாதம் வெந்தய சாதம் முட்டைக்கோஸ் சாதம் வெண்டைக்காய் சாதம் கறிவேப்பிலைப்பொடி சாதம் பூண்டுப்பொடி சாதம் கொத்துமல்லி சாதம் பாதாம் திராட்சை சாதம் குடமிளகாய் சாதம் முட்டை சாதம் ஆரஞ்சு முந்திரி சாதம் காஷ்மீரி புலவு மாங்காய் சாதம்
|
|
|
தேவையான பொருட்கள்
கீரை - 1 கட்டு நெய் - 1 மேசைக்கரண்டி துருவிய சீஸ் - 1/4 கிண்ணம் வெந்த பாசுமதி சாதம் - 2 கிண்ணம் வெங்காயம் - 1 பச்சைமிளகாய் நறுக்கியது - 1 தேக்கரண்டி மசாலா பவுடர் (all spice powder) - 1 தேக்கரண்டி பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப பால் - 1/4 கிண்ணம் |
|
செய்முறை
கீரையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கிப் பின்னர் கீரையை போட்டு வேகவிடவும். வெந்த பின்னர் உப்பு, மசாலா பொடிதூவிக் கிளறி இறக்கவும்.
இதை சாதத்துடன் போட்டு பாதி அளவு சீஸ் போட்டுக் கிளறி அவியனில் (ஓவன்) வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலாக மீதிப் பாலாடைக் கட்டியைப் போட்டுப் பாலை விடவும்.
இதை அலுமினியம் தாளால் (alumunium foil) மூடி 350 டிகிரீ ·பாரன்ஹீட்டில் 15 நிமிடம் அவிக்கவும். பின் எடுத்து சூட்டுடன் சாப்பிடவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More