|
விழிப்புணர்வு குறுநாடகம்: கி.பி. 2030 |
|
- இளஞ்செழியன்|ஜூலை 2019| |
|
|
|
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வளர்ந்து 2030ஆம் ஆண்டில், வேலை செய்யத்தொடங்கிய பிறகு மீண்டும் தமது நண்பர்களைக் கண்டு பேசுகின்றனர். அவர்களது பெற்றோரும் இவ்வூரில் தான் இருக்கின்றார்கள்.
காட்சி 1 (பிள்ளைகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்)
ஆஷிஷ்: நான் எங்கப்பா மேல கேஸ் போடப்போறேன். அதுக்கு நீங்களெல்லாம் உதவி செய்யவேண்டும். சுரேஷ்: என்னடா சொல்கிறாய்? அப்பா மேல எப்படிடா கேஸ் போடமுடியும்? அதுக்கெல்லாம் சட்டம் இருக்கா? மாலா: எப்படி கேஸ் போடமுடியும் என்பது இருக்கட்டும், ஏன் கேஸ் போடுகிறானென்று கேள்! என்ன ஆச்சு ஆஷிஷ் உனக்கு? ஆஷிஷ்: இந்தா, இந்த மெடிக்கல் ஜர்னல் ரிப்போர்ட்டைப் பார். எனக்கு இப்போது மட்டுமல்ல, நான் வளரும்போதில் இருந்து என் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் காரணம் என்னன்னு போட்டிருக்கிறான். இந்தக் கொடுமைகளுக்குக் காரணம் என் அப்பாதான். அதற்காக அவரைக் கோர்ட்டுக்கு இழுக்கிறேன். சுரேஷ்: இந்த ஓர் ஆராய்ச்சியை வச்சிக்கிட்டு எப்படிடா கேஸ் போடுவே? தீப்தி: எங்கே கொடு இதை. பிரிண்ட் எல்லாம் அடிச்சிட்டு வந்திருக்கே! ஒரு முடிவோடுதான் வந்திருக்கே போல. மாலா: இதுபோல நிறைய ஆராய்ச்சிகள் வந்திருக்கின்றன. நானும் நிறையப் படித்திருக்கிறேன். குழந்தையிலேயே நிறைய ஸ்க்ரீன் டைம் கொடுத்தால் அவர்கள் என்ன ஆவார்கள் என்று நிறைய ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன. யார் கேட்கிறார்கள்! தீப்தி: அடடா, இவ்வளவு விவரம் இருக்கா! அப்படின்னா அப்பாமேல கேஸ் போட வேண்டியதுதான். சுரேஷ்: இதுல சொல்ற மாதிரியாடா நீ இருக்கே? ஆஷிஷ்: ஆமாம்டா! வாழ்க்கையிலே ஒரு விவரமும் தெரியல. வீடியோ கேமில் செயற்கை அறிவை (AI) நிறைய சேர்த்து பிளேயர்ஸைப் பிடிச்சி வைச்சிருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரியல. இது எதுவுமே எனக்கு இப்ப பிடிக்கல. வேற எந்தத் தொழிலும் தெரியல. எல்லாம் மாயமா இருக்கு. I am almost empty inside. தீப்தி: இதுல சொல்றமாதிரி எனக்கும் பெரிய பிரச்சனை இருக்கு. இவன் சொல்லிட்டான், நான் சொல்றாமாதிரி இல்லை.
காட்சி 2 (மாலாவின் பெற்றோர் வீடு. மாலாவின் தந்தையும் ஆஷிஷின் தந்தையும் இந்தியாவில் கல்லூரித் தோழர்கள். இங்கும் ஒரே ஊரில் பிள்ளைகளை வளர்த்தார்கள்.)
மது: பரா, இன்று PPயும், சரோஜாவும் எப்போ வருவதாகச் சொன்னார்கள்? மணி ஏழரை ஆயிடுச்சி. பராசக்தி: அவங்க 7 மணிக்கு வந்துட்டு சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு வேறு எங்கோ போகணும்னு சொன்னாங்க. பொதுவா அவர் லேட் பண்ணமாட்டாரே. என்ன பிரச்சனை என்று தெரியல. அப்பறம், அவரை PP என்று கூப்பிடாதீங்க. மது: ஏன் சொல்லக்கூடாது. அவன் பேர் பீதாம்பரம். காலேஜ்லேயே அவன் பீத்தல் தாங்கமுடியாம அவனுக்கு பீத்தல் பீதாம்பரம்-ன்னு பேர் வைச்சு அது PP ஆயிடுச்சு. பரா: அதோ அவங்களே வந்துட்டாங்க. மது: வாப்பா PP. எப்படி இருக்கே. வாங்க சரோஜா. என்ன டிராஃபிக்ல மாட்டியாச்சா? PP : என்னப்பா பண்றது. நிறைய கான்ஃபெரன்ஸ் கால்ஸ் . வால்ஸ்ட்ரீட் முதலீட்டாளர் கால்ஸ் வேற. அதுக்கு மேல இந்த ரோட்ல மேனுவல் கார்கள் பண்ற அட்டகாசம் தாங்க முடியல. குறுக்கே, குறுக்கே பூந்து போயிடுறானுங்கோ. நம்ம ஆட்டோ பைலட் கார்கள் நேர்மையா ஓடி, கடைசில லேட்டாவுது. மது: அப்ப பழைய மேனுவல் கார்களை எல்லாம் தடுக்கறதுதானே. உனக்குதான் கவர்னர் செனட்டர்களையெல்லாம் தெரியுமே. PP : அது பெரிய பாலிடிக்ஸ்! மக்கள் சீக்கிரம் மாறமாட்டேங்கிறாங்க. சரோஜா: என்ன பரா , எப்படி இருக்கே? ரொம்ப நாள் ஆயிடுச்சி பார்த்து. மகள் மாலா ஊருக்கு வந்திருக்காள் என்று கேள்விப்பட்டேன். அவள் வேலையெல்லாம் எப்படி இருக்கு? பரா: அவள் நன்றாக இருக்கிறாள். அவ ஸ்கூல் காலேஜ் ஃப்ரெண்ட்ஸைப் பார்க்கப் போயிருக்கிறாள் - இதோ வந்துட்டா. சரோஜா: வாம்மா மாலா. இளைச்சி போய்ட்டியே. உனக்கு வேலை எப்படிம்மா இருக்கு? மாலா: வேலையெல்லாம் நன்றாக இருக்குது ஆண்ட்டி. ஆஷிஷ் மற்ற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பாத்துட்டுதான் வர்றேன். அங்க்கிள், உங்கள் மகன் உங்கள் மேலே வழக்கு தொடரப்போகிறான். சரோஜா: ஐயோ, இந்தப் பிள்ளை எவ்வளவு நல்லாத் தமிழ் பேசுறா! PP : தமிழ் இருக்கட்டும் அவள் என்ன சொன்னாள் கேட்டியா? சரோஜா: உங்கள் மேலே ஆஷிஷ் கேஸ் போடுறானாம். அவ்வளவுதானே. நான் தமிழை இன்னமும் மறக்கவில்லை. PP : எதுக்கு கேஸ் போடுறானாம்? மாலா: எல்லாம் ஸ்க்ரீன் டைமுக்காகத் தான். அவனுக்குச் சின்னவயதிலேயே அதிகமா கொடுத்ததுக்காக. மது: ஓ. அப்படி போவுதா? நீதான் ஸ்மார்ட் ஃபோன் கொடுத்து டயப்பர் மாத்துவேன்னு சொல்லிக்கிட்டு இருப்பியே! அதுவா? PP: ஏய், நீ வேற! சரோஜா: அவனை வீட்டுக்கு வரச்சொல்கிறேன் என்னன்னு விசாரிக்கலாம். |
|
காட்சி 3 (பீதாம்பரம் வீடு)
PP: வாங்கப்பா. நீங்க எல்லாரும் இவனுக்கு வக்கீலா? சுரேஷ்: இல்ல அங்க்கிள். மாலா: நீங்க இப்படி மிரட்டுறதால்தான் ஆஷிஷ் இப்படி இருக்கான். PP: ஏன்பா, எல்லாருமேவா ஸ்மார்ட் ஃபோனால கெட்டுப் போய்ட்டாங்க? ஆஷிஷ்: யாரும் உங்கள் அளவுக்கு ஸ்க்ரீன் டைம் கொடுக்கவில்லை. ஸ்மார்ட் ஃபோன் கொடுத்து டயப்பர் மாத்தவில்லை. சரோஜா: உன்கிட்டேயிருந்து ஸ்மார்ட் ஃபோன் எடுக்க முடியாதேடா. நீ ரொம்ப அடம் பண்ணுவியே. PBSல எஜுகேஷன் புரோகிராம் பாத்துதானேடா நீ சாப்புடுவே! அப்புறம் PBS சில்ட்ரன் புரோகிராம் எந்நேரமும் பார்ப்பாய். அது ஓகேன்னு அப்பாகூட சொல்வார். உங்க தாத்தா பாட்டி கூட நல்லதுன்னு சொன்னாங்க. மாலா: ஆண்ட்டி, எங்கம்மா ஒரு நாள் PBS சில்ட்ரன் புரோகிராம் பாத்துட்டு, எல்லாத்தையும் கூடாதுன்னிட்டாங்க. சுரேஷ்: எங்க வீட்டிலேயும் ரொம்ப TV டைம் கிடையாது. எங்கள் எல்லோருக்கும் அப்போ ஆஷிஷைப் பார்த்தா பொறாமையா இருக்கும். தீப்தி: ஆஷிஷ்போல நானும் இப்போ ரொம்ப அவஸ்தைப் படுகிறேன். சின்ன வயசில் அளவில்லாம வீடியோ கேம்ஸ். Real animal rescue is too boring and hard. அப்போ shopaholic விளையாட விட்டாங்க. இப்போ ஷாப்பிங் பண்ணப் பணம் கொடுக்க மாட்டேங்கிறார் அப்பா! சரோஜா: ஏம்மா, உன் பணத்தில் வாங்க வேண்டியதுதானே? தீப்தி: அது பத்தலை ஆண்ட்டி. Reality is tough. PP : அதனாலே நீயும் உங்க அப்பா மேலே கேஸ் போடு. காசு கேளு. எல்லாம் தேறினா மாதிரிதான். சரோஜா: ஏம்பா நீங்க ரெண்டு பேரும் இந்த ரெண்டு பேருக்கும் எடுத்துச் சொல்ல மாட்டீங்களா? எல்லோரும் ஒரே ஸ்கூல், ஒரே யுனிவெர்ஸிடிதானே. சுரேஷ்: இந்த மாதிரி நிறையப் பேர் எங்ககூட படிச்சிருக்காங்க. PP: என்னப்பா எதோ ஒரு வியாதிமாதிரி சொல்றே! ஆஷிஷ்: இதுக்கு இன்னமும் பேர் வைக்கல. இன்னும் கொஞ்சநாளில் இந்தக் கொள்ளை நோய்க்கு வேக்ஸின்கூட வந்துரும். தீப்தி: எல்லா அப்பா அம்மாவுக்கும் போட்டுடணும். PP: ஸ்மார்ட் ஃபோன் கொடுத்து டயப்பர் மாத்தினது தப்புன்னா, Apple, Google மேலே கேஸ் போடு. நான் என்ன செய்வேன். உனக்கு புத்தி எங்க போச்சுன்னே தெரில. தீப்தி: He lost it in the video games. ஆஷிஷ்: சுரேஷ், எங்கடா அந்த அட்டார்னி? நம்ம அங்கே போகலாம். PP: போய் கேஸ் போடுடா. பார்க்கலாம். நான் சக்ஸஸ்ஃபுல் நபர். என்னை யாரும் தோக்கடிக்க முடியாது!
காட்சி 4 (ஒரு வழக்கறிஞர் அலுவலகம்)
ஆஷிஷ்: என்னடா. உனக்குத் தெரிந்த அட்டார்னி என்று இங்கு வருகிறேன். இந்த அட்டார்னி செலக்ட் செய்யக்கூட எனக்குத் தெரியல. அதுக்கு ஒரு 1008 apps இருக்கு. சுரேஷ்: இவங்களுக்கும் நம்ம வயசிலே பசங்க இருக்காங்க. இவள் அம்மாவோட ஃப்ரெண்டு. அவர் ஒரு பெரிய Class action law suit group-ஐச் சேர்ந்தவர். அட்டார்னி: வணக்கம். ஆஷிஷ்: வணக்கமா! அட்: எல்லோரையும் நான் தமிழ்ப் பள்ளியில பார்த்திருக்கேன். மாலா: ஆண்ட்டி, நான் சொன்னேனே அவன்தான் இவன். இவன் அப்பா ஸ்மார்ட் ஃபோன் கொடுத்து டயப்பர் மாற்றி ஆரம்பித்தார். இவள் அப்பா ஷாப்பிங்குக்குக் காசு கொடுக்கமாட்டேங்கிறார். சின்ன வயசில் screen-time baby-sitting ஆல் வந்த பிரச்சனை. அட்: ஸ்க்ரீண்டைமால், தந்தைமீது வழக்கு! என்னம்மா இது விசித்திரமா இருக்கு. சுரேஷ்: விசித்திரமல்ல. இது ஒரு சாதாரண மனிதனின் வழக்கு. இக்காலத்தில் இருக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனின் வழக்கும். அட்: அப்போ பராசக்தியைக் கூப்பிடவேண்டியதுதான். மாலா: அம்மாவா? அட்: வாங்க வாங்க! இந்தப் பிள்ளைங்க கதையை கேட்டிங்களா? பரா: நீங்க என்ன செய்யப்போறீங்க? அட்: சரி, பிள்ளைகளே, உங்க அப்பா அம்மா எல்லாம் தெரிந்துதான் அதைச் செய்தார்கள் என்று சொல்கிறீர்களா? ஆஷிஷ்: அவங்க பெருமைக்காகச் செய்தார்கள். அப்போகூட இதுபோலப் பல ஆராய்ச்சிகள் வந்திருந்தன. அவர்கள் கேட்கவில்லை. பரா: உங்களுக்கு டெக்னாலஜி பழக்கம் வேண்டும், டெக்னாலஜி வழியாக படிக்கணும் என்று தானே கொடுத்தார்கள். தீப்தி: நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஸ்க்ரீன் டைம் குறைச்சீங்க, இந்த ஆண்ட்டியும் அப்படியே செய்தார்கள் என்று மாலா சொன்னாள். அட்: டெக் கேட்ஜட்ஸ் மார்க்கெட்டிங் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கு. இன்னும் peer pressure வேற. இதையும் மீறி பெற்றோர்கள்தான் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கு. இப்போதைக்கு உங்களுக்கு professional help தேவை. நல்ல rehab center போய்ப் பாருங்கள். இந்தக் கொடுமையான நிலையிலிருந்து வெளியே வாருங்கள். அதுவரை இந்த வழக்கை எப்படி உச்சநீதி மன்றம்வரை கொண்டு செல்வது என்று ஆராய்ச்சி செய்து வைக்கிறேன். மேலும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வலுவான campaign ஒன்று தொடங்கவும் ஏற்பாடு செய்யலாம்.
(வந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, குழப்பம் தெளியாமலே வணக்கம் போட்டுவிட்டு வெளியே போகின்றனர்.) ---திரை விழுகிறது---
இளஞ்செழியன் |
|
|
|
|
|
|
|