அவல் லட்டு
|
|
|
|
தேவையான பொருட்கள் அவல் - 1 கிண்ணம் உருளைக்கிழங்கு - 2 தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 5 கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி இஞ்சி - 1 சிறுதுண்டு கொத்தமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - பொறிப்பதற்கு உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை அவலை லேசாக வறுத்து மையப் பொடிக்கவும். உருளைக்கிழங்கை நன்கு வேகவிட்டுக் கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும். மசித்த உருளையுடன் அவல் பொடி, உப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல், கரம் மசாலா, கொத்துமல்லி, கறிவேப்பிலை எல்லாம் போட்டு நன்றாகப் பிசையவும். காரப்பொடி வேண்டுமானால் போட்டுக் கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து, சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். அவல் பொடி சேர்ப்பதால் மொறு மொறு என இருக்கும். தோசைக்கல்லில் போட்டுச் சுற்றிலும் எண்ணெய் விட்டும் எடுக்கலாம். எல்லோரும் ரசிக்கும் சிறுதீனி இது. |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
அவல் லட்டு
|
|
|
|
|
|
|