|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|டிசம்பர் 2017| |
|
|
|
1. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்? 45, 89, 176, 349, ?
2. ஒரு வகுப்பில் இருந்த 25 மாணவர்களின் சராசரி வயது 15. மாணவர்கள் வயதுடன் ஆசிரியரின் வயதைச் சேர்த்தால் சராசரி 16 ஆகிறது. ஆசிரியரின் வயது என்ன?
3. 9847, 7984, 4798, ...... வரிசையில் அடுத்து வரவேண்டிய எது, ஏன்?
4. போட்டித் தேர்வு ஒன்றில் ராஜா கேள்விகளில் சிலவற்றுக்குச் சரியாகவும் சிலவற்றுக்குத் தவறாகவும் பதிலளித்தான். தேர்வில் அவன் பெற்ற மதிப்பெண் 55. நூறு கேள்விகள் கொண்ட அத்தேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் தரப்பட்டது, தவறான விடைக்கு 2 மதிப்பெண் கழிக்கப்பட்டது என்றால் அவன் எத்தனை கேள்விகளுக்குச் சரியான விடையளித்திருப்பான்?
5. ஒரு பண்ணையில் ஆடுகளும் கோழிகளும் இருந்தன. அவற்றின் மொத்த எண்ணிக்கை 42. அவற்றின் கால்களை எண்ணினால் 120 வருகிறது. அப்படியானால் ஆடுகள் எத்தனை, கோழிகள் எத்தனை?
அரவிந்த் |
|
விடைகள் 1. வரிசை (x*2-1), (x*2-2), (x*2-3) என்ற வரிசையில் அமைந்துள்ளது. 45*2 - 1 = 89; 89*2 - 2 = 176; 176*2 - 3 = 349. ஆகவே அடுத்து வர வேண்டிய எண் = 349*2 - 4 = 694.
2. மாணவர்களின் எண்ணிக்கை = 25 மாணவர்களின் மொத்த வயது = 25 * 15 = 375 ஆசிரியர் + மாணவர்களின் மொத்த வயது = 26 * 16 = 416 ஆசிரியரின் வயது = 416 - 375 = 41
3. வரிசை, எண்களின் வரிசை மாற்றாக அமைந்துள்ளது. அதாவது முதல் எண் தொகையின் இறுதி எண்ணே, இரண்டாவது எண் தொகையின் முதல் எண்ணாக அமைந்துள்ளது. (9847 - 7984) இரண்டாவது எண் தொகையின் இறுதி எண்ணே மூன்றாவது எண்ணின் முதல் எண்ணாக அமைந்துள்ளது. (7984 - 4798). ஆக, வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் = 4798 => 8479. ஆக, அடுத்து வர வேண்டிய எண் = 8479
4. சரியான கேள்வி = x என்க. தவறான கேள்வி = y என்க x + y = 100 ; x - 2y = 55; இரண்டையும் சமன் செய்ய x + y = 100 (-) x - 2y = 55 3y = 45 y = 15.
ஒவ்வொரு தவறான விடைக்கும் இரண்டு மதிப்பெண் வீதம் கழிக்க = 15*2 = 30; 85-30 = 55; ஆக, தவறான விடைகள் = 15; சரியான விடைகள் = 85
5. ஆடுகள் = x ; கோழிகள் = y. அவற்றின் மொத்த எண்ணிக்கை = x + y = 42; ஆடுகளின் கால் எண்ணிக்கை = 4 x x = 4x; கோழிகளின் கால் எண்ணிக்கை = 2 x y = 2y 4x + 2y = 120 x + y = 42 x = 42 - y 4x + 2y = 120 4 (42 - y) + 2y = 120 168 - 4y + 2 y = 120 2y = 168 - 120 = 48 y = 24 கோழிகள் = 24; ஆடுகள் = 42 - 24 = 18 |
|
|
|
|
|
|
|