|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|நவம்பர் 2017| |
|
|
|
1. 0 முதல் 9 வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி, கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ விடை 1 வரச்செய்ய இயலுமா?
2. 1997 1999 ? 2011 2017 2027 மேற்கண்ட வரிசையில் விடுபட்ட எண் எது, ஏன்?
3. ஆறு பூனைகள், ஆறு எலிகளைப் பிடிக்க ஆறு நிமிடங்கள் ஆகின்றன என்றால் 60 நிமிடத்தில், 60 எலிகளைப் பிடிக்க எத்தனை பூனைகள் தேவைப்படும்?
4. கடைக்குச் சென்ற ராமு சில பொருட்களை வாங்கினான். அந்தப் பொருட்களின் மொத்த விலை $70. ராமு இரண்டு $50 நோட்டுகளைக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, இரண்டு $100 நோட்டுக்களைத் தவறாகக் கொடுத்து விட்டான். அதைச் சரியாகக் கவனிக்காத கடைக்காரரும் மீதம் மூன்று $10 நோட்டுக்களைக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு மூன்று $50 நோட்டுக்களைக் கொடுத்து விட்டார். வீட்டிற்கு வந்தபின்பு தான் ராமுவுக்கு நடந்த விஷயம் புரிந்தது. இதனால் ராமுவுக்குக் கிடைத்தது நஷ்டமா, லாபமா? அது எவ்வளவு?
5. ஐந்து ஒன்பதுகளைப் பயன்படுத்தி கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ 10 விடையாக வரச் செய்ய வேண்டும். இயலுமா?
அரவிந்த் |
|
விடைகள் 1. இயலும் 148/296 + 35/70 = 0.5 + 0.5 = 1
2. 2003. வரிசை, பகா எண்களின் தொடர் வரிசையாக அமைந்துள்ளது.
3. ஆறு பூனைகள், ஆறு எலிகளை ஆறு நிமிடங்களில் பிடிக்கின்றன. அப்படியானால் ஒரு பூனை, ஒரு எலியைப் பிடிக்க ஒரு நிமிடம் ஆகும் என எடுத்துக் கொண்டால் அது தவறாகும். ஒரு பூனை, ஒரு எலியைப் பிடிக்க ஆறு நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது என்பதே சரி. ஆக, அறுபது நிமிடத்தில் ஒரு பூனை 10 எலிகளைப் பிடிக்கும். ஆகவே அறுபது எலிகளை, அறுபது நிமிடத்தில் பிடிக்க ஆறு பூனைகளே போதும்.
4. பொருட்களின் விலை = $70 ராமு கொடுத்தது = $100 x 2 = $200 ராமு கடைக்காரரிடம் பெற்றுக்கொண்டது = $50 x 3 = $150 ராமு உண்மையில் கொடுத்த தொகை = $200 - $150 = $50 பொருளின் உண்மையான விலை = $70 ராமு உண்மையில் கொடுத்தது = $50 ஆக $20 ராமுவுக்கு லாபமாகக் கிடைத்தது.
5. இயலும் 9 + 99/99 = 10 99/9 - 9/9 = 10 |
|
|
|
|
|
|
|